Home / கட்டுரை (page 13)

கட்டுரை

ஈமானிய அம்சங்கள் (உரைநடை)

ஈமான் எனும் பதம், மொழி ரீதியாக நம்பிக்கை எனும் கருத்தைக் கொண்டுள்ளது. ஷரீஅத்தின் கண்ணோட்டத்தில் அதன் கருத்து, நாவினால் விசுவாசப் பிரமாணத்தை மொழிந்து, உள்ளத்தால் பூரணமாக நம்பி, புலன் உறுப்புக்களால் அதன்படி செயற்படுவதாகும். இறை விசுவாசமானது இறைவழிபாட்டின் மூலம் அதிகரிக்கும். அவ்வாறே, இறைவனுக்கு மாறு செய்வதன்மூலம் குறைந்துவிடும் என்பதாகும். எமது ஆத்மா இறைவனுடன் சிறந்ததொரு நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்கின்ற விதத்திலும், மறுமையில் நாம் நிச்சயமாக நமது இறைவனை சந்திப்போம் என்பதில் அசையாத, ...

மேலும் காண

ரமழானுக்குப் பின் நாம்

ரமழான் மாதத்தில் நோன்பை நல்ல முறையில் நிறைவேற்றவும், தொழுகை, குர்ஆன் ஓதுதல், பிரார்த்தனை, திக்ரு, தர்மம்.. போன்ற ஸாலிஹான அமல்களை செய்யவும் வாய்ப்பளித்த அல்லாஹ்விற்க்கே எல்லா புகழும். அவனது அருளும் சாந்தியும் நபி (ஸல்) அவர்கள் மீதும், அவர்களது குடும்பத்தினர்கள், தோழர்கள், அவர்களை வாய்மையுடன் பின்பற்றி வந்தவர்கள் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக! கண்ணியத்திற்குரிய சகோதரர்களே! ரமழானில் எந்த இறைவனோ அவன் தான் எல்லா மாதங்களுக்கும் இறைவன். அவனுக்கு கட்டுப்பட்டு ...

மேலும் காண

ஷரீஆவின் சான்றுகளைக் கையாளும் முறை – 3

விதி: தனியான, அல்லது விசேசமான சட்டங்களைக் கொண்டுள்ள வசனங்கள், அல்லது நிகழ்வுகள் நீங்கலாக ஏனெயவைகளை அதன் பொதுவான கருத்தோட்டத்தைக் கொண்டு நோக்குதல். ஷரீஆத்துறை விதியாளர்கள் இதை العبرة بعموم اللفظ لا بخصوص السبب ‘படிப்பினை என்பது குறித்த வார்த்தையின் பொதுவான கருத்துக்களின் அடிப்படையில் பெறுவதாகும். குறித்த காரணத்தை அடிப்படையாக வைத்து அல்ல’ என்றும், மற்றும் சிலர் إبقاء اللفظ على عمومه ‘வார்த்தையை அதன் பொதுப்படையான கருத்தோட்டத்தில் நிலை ...

மேலும் காண

ஷரீஆவின் சான்றுகளைக் கையாளும் முறை – 2

நஸ் பற்றிய விளக்கம். சான்றுக்கு அரபியில் نصّ என்று கூறப்படும். ஒரு பொருளின் இறுதியைக் குறிக்க அரபியில் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுவதாக மொழியியலாளர்கள் கருத்துக் கூறுகின்றனர். குர்ஆனின் வசனம், மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களுக்கு ‘நஸ்’ என்றழைக்கப்படுவதுண்டு. ஒரு பிரச்சினைக்கான இறுதித்தீர்வாக குர்ஆன், ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் அமைவதால் இந்தச் சொல் பயன்படுத்தப்படுகின்றது என்ற உண்மையினை அதன் மொழிக்கருத்துடன் தொடர்புபடுத்தி அறிய முடிகின்றது. குர்ஆன், ஹதீஸில் இருந்து வெளிப்படையாக விளங்கப்படும் சட்டங்களைக் குறிக்கவும் ...

மேலும் காண

ஷரீஆவின் சான்றுகளைக் கையாளும் முறை – 1

முன்னுரை புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தமானது. அவனது அருளும், சாந்தியும் நமது தூதரும், வழிகாட்டியுமான முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள், மற்றும் நல்லடியார் அனைவர் மீதும் உண்டாகட்டுமாக! ஷரீஆவின் சான்றுகளைக் கையாளுவோர் கவனத்திற்கு ஷரீஆவின் சான்றுகளைக் கையாளுவோர் அவைபற்றிய தெளிவும், ஆழமான அறிவும் உள்ளவர்களாக இருப்பது அவசியமாகும். ஒருவர் சான்றுகள் பற்றிய தெளிவான அறிவில்லாத நிலையில் அவற்றைக் கையாளுகின்றபோது முன்னோர்களான ஸஹாபாக்கள், நல்வழி நடந்த இமாம்கள் ...

மேலும் காண