Home / கேள்வி - பதில் / [கேள்வி-23/200]: “ஏற்றுக்கொள்ளுதல்” என்ற நிபந்தனைக்கு அல்குர்ஆன், நபிமொழி ஆகியவைகளிலிருந்து பெறப்பட்ட ஆதாரங்கள் எவை?

[கேள்வி-23/200]: “ஏற்றுக்கொள்ளுதல்” என்ற நிபந்தனைக்கு அல்குர்ஆன், நபிமொழி ஆகியவைகளிலிருந்து பெறப்பட்ட ஆதாரங்கள் எவை?

சாட்சியத்தை ஏற்றுக்கொள்ளாதோர் விடயத்தில் அல்லாஹ் கூறுகின்றான்;

احْشُرُوا الَّذِينَ ظَلَمُوا وَأَزْوَاجَهُمْ وَمَا كَانُوا يَعْبُدُونَ﴿٢٢﴾ مِن دُونِ اللَّـهِ فَاهْدُوهُمْ إِلَىٰ صِرَاطِ الْجَحِيمِ ﴿سورة الصافات ٢٢-٢٣﴾

“அநியாயம் செய்தார்களே அவர்களையும் அவர்களுடைய துணைகளையும், அவர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றையும் ஒன்று சேருங்கள். (22) “அல்லாஹ்வையன்றி (அவர்கள் வழிபட்டவை அவை) பின்னர் அவர்களை, நரகத்தின் பாதைக்கு கொண்டு செல்லுங்கள். ( அஸ்-ஸாஃப்பாத் – 22-23 )

إِنَّهُمْ كَانُوا إِذَا قِيلَ لَهُمْ لَا إِلَـٰهَ إِلَّا اللَّـهُ يَسْتَكْبِرُونَ ﴿٣٥﴾ وَيَقُولُونَ أَئِنَّا لَتَارِكُو آلِهَتِنَا لِشَاعِرٍ مَّجْنُونٍ

﴿سورة الصافات ٣٥-٣٦﴾

“அல்லாஹ்வைத்தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை ” என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், மெய்யாகவே அவர்கள் பெருமையடித்தவர்களாக இருந்தனர். ( 35 )   “ஒரு பைத்தியக்காரப் புலவருக்காக நாங்கள் மெய்யாக எங்கள் தெய்வங்களைக் கைவிட்டு விடுகிறவர்களா?” என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.  ( அஸ்-ஸாஃப்பாத் – 35-36 )

ஸூரா அஸ்-ஸாஃப்பாத் 22 முதல் 36 வரையுள்ள வசனங்கள் இவ்விஷயத்தைப்பற்றி மிகத்தெளிவாக விளக்குகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் என்னை நேர்வழி மற்றும் ஞானத்துடன் அனுப்பியதற்கு உவமையாவது, நிலத்தில் விழுந்த பெருமழை போன்றதாகும். அவற்றில் சில நிலங்கள், நீரை ஏற்றுக் கொண்டு ஏராளமான புற்களையும் பசுமையான செடி கொடிகளையும் முளைவித்தன. மற்ற சில நிலங்கள் தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளும் தரிசு நிலங்களாகும். அதனை இறைவன் மக்களுக்குப் பயன்படச்செய்தான். அதனை மக்கள் அருந்தினர்; (தமது கால் நடைகளுக்கும்) புகட்டினர்; விவசாயமும் செய்தனர். அந்தப் பெருமழை இன்னொரு வகை நிலத்திலும் விழுந்தது. அது (ஒன்றுக்கும் உதவாத) வெறும் தட்டாந்தரை. அது தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளவும் இல்லை; புற்பூண்டுகளை முளைவிக்கவுமில்லை.

இதுதான் அல்லாஹ்வின் மார்க்கத்தில் விளக்கம்பெற்று நான் கொண்டுவந்த தூதினால் பயனடைந்து, கற்றுத்தெரிந்து பிறருக்கும் கற்றுக்கொடுத்தவருக்கும், நான் கொண்டுவந்த தூதை ஏறிட்டுப் பாராமலும் நான் கொண்டு வந்த அல்லாஹ்வின் நேர்வழியை ஏற்றுக் கொள்ளாமலும் வாழ்கிறவனுக்கும் உவமையாகும். (நூல் புகாரி)

About நிர்வாகி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *