Home / அகீதா 200 கேள்விகள் / [கேள்வி-26/200]: “நேசித்தல்” என்ற நிபந்தனைக்கு அல்குர்ஆன், நபிமொழி ஆகியவைகளிலிருந்து பெறப்பட்ட ஆதாரங்கள் எவை?

[கேள்வி-26/200]: “நேசித்தல்” என்ற நிபந்தனைக்கு அல்குர்ஆன், நபிமொழி ஆகியவைகளிலிருந்து பெறப்பட்ட ஆதாரங்கள் எவை?

அல்லாஹ் கூறுகின்றான்;

أَيُّهَا الَّذِينَ آمَنُوا مَن يَرْتَدَّ مِنكُمْ عَن دِينِهِ فَسَوْفَ يَأْتِي اللَّـهُ بِقَوْمٍ يُحِبُّهُمْ وَيُحِبُّونَهُ أَذِلَّةٍ عَلَى الْمُؤْمِنِينَ أَعِزَّةٍ عَلَى الْكَافِرِينَ يُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّـهِ وَلَا يَخَافُونَ لَوْمَةَ لَائِمٍ ۚ ذَٰلِكَ فَضْلُ اللَّـهِ يُؤْتِيهِ مَن يَشَاءُ ۚ وَاللَّـهُ وَاسِعٌ عَلِيمٌ ﴿ سورة المائدة ٥٤ ﴾

முஃமின்களே! உங்களில் எவரேனும் தன் மார்க்கத்தைவிட்டு மாறிவிட்டால் (அல்லாஹ்வுக்கு அதனால் நஷ்டமில்லை) அப்பொழுது அல்லாஹ் வேறு ஒரு கூட்டத்தாரைக் கொண்டு வருவான்;. அவன் அவர்களை நேசிப்பான்;. அவனை அவர்களும் நேசிப்பார்கள்;. அவர்கள் முஃமின்களிடம் பணிவாக நடந்து கொள்வார்கள்;. காஃபிர்களிடம் கடுமையாக இருப்பார்கள்;. அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வார்கள்;. நிந்தனை செய்வோரின் நிந்தனைக்கு அஞ்சமாட்டார்கள்;. இது அல்லாஹ்வின் அருட்கொடையாகும்;. இதை அவன் நாடியவருக்குக் கொடுக்கின்றான்;. அல்லாஹ் மிகவும் விசாலமானவனும் (எல்லாம்) நன்கறிந்தவனுமாக இருக்கின்றான். (அல்மாயிதா 54)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(எவரிடம் மூன்று தன்மைகள் உள்ளதோ அவர் இறைநம்பிக்கையின் சுவையை உணர்ந்தவராவார். அவை,

  1. அல்லாஹ்வும் அவனின் தூதரும் ஒருவருக்கு மற்ற அனைத்தையும் விட அதிக நேசத்துக்குரியோராவது.
  2. ஒருவரை மற்றவர் அல்லாஹ்விற்காக நேசிப்பது.
  3. இறை மறுப்பிலிருந்து அல்லாஹ் தம்மை விடுவித்த பின் அந்த இறை மறுப்பிற்கே திரும்பிச் செல்வதை ஒருவர் நெருப்பில் வீசப்படுவதைப் போன்று வெறுப்பது (நூல் புகாரி)

About நிர்வாகி

Check Also

உறவுகளையும் உணர்வுகளையும் மதித்து நடத்தல்

ஈதுல்-ஃபித்ர் குத்பா பேருரை – வழங்கியவர் : மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன், இஸ்லாமிய அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *