Home / அகீதா 200 கேள்விகள் / [கேள்வி-28/200]: “முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்” என்ற சாட்சியத்துக்கான ஆதாரம் யாது?

[கேள்வி-28/200]: “முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்” என்ற சாட்சியத்துக்கான ஆதாரம் யாது?

அல்லாஹ் கூறுகின்றான்;

لَقَدْ مَنَّ اللَّـهُ عَلَى الْمُؤْمِنِينَ إِذْ بَعَثَ فِيهِمْ رَسُولًا مِّنْ أَنفُسِهِمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِن  كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُّبِينٍ

﴿سورة آل عمران ١٦٤﴾

நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களுக்கு அருள் புரிந்திருக்கின்றான்;. அவன் அவர்களுக்கு அவர்களிலிருந்தே ஒரு ரஸூலை (தூதரை) அனுப்பிவைத்தான்;. அவர் அவனுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கிறார்;. இன்னும் அவர்களைப் (பாவத்தைவிட்டும்) பரிசுத்தமாக்குகிறார்; மேலும் அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார் – அவர்களோ நிச்சயமாக இதற்குமுன் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர். ( ஸூரா ஆலு இம்ரான்-164 )

மேலும்   அல்லாஹ் கூறுகின்றான்;

لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِّنْ أَنفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُم بِالْمُؤْمِنِينَ رَءُوفٌ رَّحِيمٌ

﴿التوبة ١٢٨﴾

(முஃமின்களே!) நிச்சயமாக உங்களிலிருந்தே ஒருதூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்; நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தத்தைக் கொடுக்கின்றது அன்றியும், உங்(கள் நன்மை)களையே அவர் பெரிதும் விரும்புகிறார்; இன்னும் முஃமின்கள்மீது மிக்க கருணையும் கிருபையும் உடையவராக இருக்கின்றார். ( ஸூரா அத்தவ்பா-128 )

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;

إِذَا جَاءَكَ الْمُنَافِقُونَ قَالُوا نَشْهَدُ إِنَّكَ لَرَسُولُ اللَّـهِ ۗ وَاللَّـهُ يَعْلَمُ إِنَّكَ لَرَسُولُهُ وَاللَّـهُ يَشْهَدُ إِنَّ الْمُنَافِقِينَ لَكَاذِبُونَ

﴿ سورة المنافقون ١ ﴾

“(நபியே!) முனாஃபிக்குகள் (நயவஞ்சகர்கள்) உம்மிடம் வந்து, “நிச்சயமாக, நீர் அல்லாஹ்வின் தூதராக இருக்கின்றீர்” என்று நாங்கள் சாட்சி சொல்கிறோம்” என்று கூறுகின்றனர். மேலும், அல்லாஹ், “நிச்சயமாக நீர் அவனுடைய தூதராக இருக்கின்றீர்” என்பதை நன்கு அறிவான். ஆனால், அல்லாஹ், நிச்சயமாக முனாஃபிக்குகள் (வஞ்சகமாகப்) பொய்யுரைப்பவர்கள்” என்பதாகச் சாட்சி சொல்கிறான். ( ஸூரா முனாஃபிகூன்-1 )

About நிர்வாகி

Check Also

ஆடியோ [தொடர் – 1 முதல் 10 வரை] இஃதிகாதுல் இமாம் அஷ்ஷாஃபியீ – நூல் விளக்கம் (A)

தொடர் – 1 முதல் 10 வரை ஆடியோவை கேட்க மற்றும் டவுண்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *