Home / அகீதா 200 கேள்விகள் / [கேள்வி-31/200]: தொழுகை மற்றும் (ஸகாத்) ஏழை வரி கடமையாவதற்கான ஆதாரங்கள் யாவை?

[கேள்வி-31/200]: தொழுகை மற்றும் (ஸகாத்) ஏழை வரி கடமையாவதற்கான ஆதாரங்கள் யாவை?

அல்லாஹ் கூறுகின்றான்;

فَإِن تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ فَخَلُّوا سَبِيلَهُمْ ۚ إِنَّ اللَّـهَ غَفُورٌ رَّحِيمٌ ﴿ سورة التوبة ٥ ﴾ـ 

அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பாசெய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் – நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். ( அத்தவ்பா-5 )

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;

 فَإِن تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ ۗ وَنُفَصِّلُ الْآيَاتِ لِقَوْمٍ يَعْلَمُونَ          ﴿ سورة التوبة ١١ ﴾ـ 

ஆயினும் அவர்கள் தவ்பா செய்து (மனந்திருந்தி தம் தவறுகளிலிருந்து விலகி) தொழுகையைக் கடைப்படித்து, ஜகாத்தையும் (முறையாக) கொடுத்து வருவார்களானால், அவர்கள் உங்களுக்கு மார்க்கச் சதோதரர்களே நாம் அறிவுள்ள சமூகத்தினருக்கு (நம்) வசனங்களை விளக்குகிறோம். ( அத்தவ்பா-11 )

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;

وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّـهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاءَ وَيُقِيمُوا الصَّلَاةَ وَيُؤْتُوا الزَّكَاةَ ۚ وَذَٰلِكَ دِينُ الْقَيِّمَةِ ﴿ سورة البينة  ٥ ﴾ـ 

“அல்லாஹ்வுக்கு வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக (தவறான வழியிலிருந்து விலகி சரியான வழியில்) பிடிப்புள்ளவர்களாக அல்லாஹ்வை அவர்கள் வணங்க வேண்டும், மேலும் தொழுகையை அவர்கள் நிலைநாட்டவேண்டும், மேலும் ஜகாத்தை அவர்கள் வழங்க வேண்டும் என்பதைத் தவிர (வேறெதுவும்) அவர்களுக்குக் கட்டளையிடப்படவில்லை. இதுதான் நேரான மார்க்கமாகும்.” ( அல்பய்யினா-5 )

About நிர்வாகி

Check Also

நஃபிலான தொழுகைகள் (வீடியோ)

நஃபிலான தொழுகைகள் எவை? அதற்குரிய ஆதாரங்கள், மற்றும் அவற்றை நிறைவேற்றும் முறை, அதனால் கிடைக்கும் பலன்கள் ஆகியவற்றை விளக்கும் தொடர் ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *