Home / கேள்வி - பதில் / [கேள்வி-பதில்] மாதாந்திர வினாடி-வினா – பிப்ரவரி 2019

[கேள்வி-பதில்] மாதாந்திர வினாடி-வினா – பிப்ரவரி 2019

1. வானவர்(மலக்கு)களின் தன்மை என்ன?

மனித கண்களுக்கு புலப்படாத இறைவனின் படைப்புகளில் உள்ளவர்கள்

2. படைத்து பரிபாலிக்கும் இறைவனுக்கான சிறப்புத்தன்மைகள் வானவர்களுக்கு உண்டா ?

இல்லை

3. வானவர்கள் எதனால் படைக்கப்பட்டவர்கள் ?

ஒளியால் படைக்கப்பட்ட வர்கள்

4. வானவர்களின் பணி என்ன?

i. அல்லாஹ்வுக்கு முற்றிலும் அடிபணிந்து (இபாதத்) வழிபடுவது …
ii. அல்லாஹ்வின் கட்டளைகளை உடனடியாக நிறைவேற்றுவது ..

5. வானவர்களின் எண்ணிக்கை எவ்வளவு. ?

அல்லாஹ்வைத் தவிர வேறுயாரும் அறியமாட்டார்கள்

6. பைத்துல் மஃமூர்* என்றால் என்ன ?

வானத்திலுள்ள மலக்குமார்களுக்கான தொழும் இடம்

7. பைத்துல் மஃமூரில் தினமும் எத்தனை மலக்குகள் தொழுவார்கள் ?

எழுபதாயிரம் (70,000) மலக்குகள்

8. வானவர்கள் பைத்துல் மஃமூரில் எத்தனை முறை தொழுவார்கள் ?

ஒரே ஒருமுறை தொழுவார்கள்

9. வானவர் ஜிப்ரீலுக்கு எத்தனை சிறகுகள் உள்ளன ?

அறுநூறு (600) சிறகுகள் உள்ளன

10. வானவர் ஜிப்ரீலை எதார்த்த உருவத்தில் அறுநூறு (600) சிறகுகளுடன் நேரில் கண்டவர் யார் ?

முஹம்மது நபி (ஸல்) அவர்கள்

11. முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் மனித உருவில் வந்து மார்க்கத்தை ஸஹாபாக்களுக்கு கற்றுத்தந்த வானவர் யார் ?

ஜிப்ரீல் (அலை)

12. நபிமார்களுக்கு இறைச் செய்தியை சேர்ப்பிக்கும் பணியை செய்யும் வானவர் யார்?

ஜிப்ரீல் (அலை)

13. வானவர்கள் மனித உருவில் வந்து உரையாடிய மூன்று நபிமார்கள் யார்?

1. இப்ராஹீம் (அலை)
2. லூத் (அலை)
3. முஹம்மது நபி (ஸல்)

14. வானவர் ஜிப்ரீலை மனித உருவில் பார்த்த பெண்மணி யார்?

மர்யம் (அலை)

15. மறுமை நாளில் சூர் ஊதுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள வானவர் யார்?

இஸ்ராஃபீல் (அலை)

16. மழை பொழிவித்து, தாவரங்களை வளர்க்கும் பணிக்காக அல்லாஹ்வால் நியமிக்கப்பட்ட வானவர் யார்?

மீகாயீல் (அலை)

17. மனித உயிர்களை கைப்பற்றும் பொறுப்புக்கு நியமிக்கப்பட்ட வானவர் யார்?

மலக்குல் மவ்த்

18. நரகத்தின் காவலராக நியமிக்கப்பட்ட வானவர் யார்?

மாலிக்

19. தாயின் கருவறையில் மனிதனுக்கு அல்லாஹ் நான்கு விஷயங்களை தீர்மானித்து அவற்றை எழுதும்படி மலக்குகளுக்கு கட்டளை இடுகிறான். அவை யாவை ?

i. வாழ்வாதாரம் (RIZK)
ii. ஆயுட்காலம்
iii. அவனது செயல்கள்
iv. அவனது இறுதி முடிவு

20. மனிதனை மண்ணறையில் வைத்ததும் அவனிடம் மலக்குகள் கேட்கும் மூன்று கேள்விகள் என்ன ?

அ. உனது இறைவன் யார்?
ஆ. உனது மார்க்கம் எது?
இ. உனது நபி யார்?

21. மறுமை நாளில் இறைவனின் அர்ஷை எத்தனைபேர் சுமப்பார்கள் ?

மறுமை நாளில் எட்டு வானவர்கள் இறைவனின் அர்ஷை சுமப்பார்கள்

22. அல்லாஹ்விடம் பெரும்பதவியும், கண்ணியமும் மிக்க வானவர் யார் ?

ஜிப்ரீல் (அலை)

23. ஒருவர் எந்த இடத்தில் தொழுதாரோ அந்த இடத்திலேயே (ஒழு முறியாத நிலையில்) அமர்ந்திருக்கும்போது அவருக்காக பிரார்த்தனை செய்பவர்கள் யார் ?

வானவர்கள்

24. இரவு நேரத்து வானவர்களும் பகல் நேரத்து வானவர்களும் சந்தித்துக்கொள்ளும் தொழுகைகள் எது ?

ஃபஜ்ர் – அஸர் ஆகிய இரண்டு தொழுகைகள்

25. எந்த வீட்டின் கருணைக்குரிய வானவர்கள் நுழைய மாட்டார்கள் ?

உருவப்படங்கள் மற்றும் நாய் உள்ள வீட்டில் கருணைக்குரிய வானவர்கள் நுழைய மாட்டார்கள்

26. ‘தஜ்ஜால் உள்ளே நுழைந்து விடாமல் எந்த‌ நகரத்தை வானவர்கள் காவல் காப்பார்கள் ?

மதீனா நகரம்

27. ஜிப்ரீல் (அலை) அவர்களால் ஸலாம் கூறப்பட்ட நபி (ஸல்) அவர்களின் மனைவியர் இருவர் யார் ?

கதீஜா (ரழி) – ஆயிஷா (ரழி)

28. தாயிஃப் நகரத்திற்கு அருகில் நபிகளார், ஜிப்ரீல் (அலை) அவர்களையும், மலக்குல் ஜிபாலையும் சந்தித்த இடம் எது ?

கர்னுல் மனாஸில்

ஆக்கம்
உம்முஷைமா

_____ o0o _____

Check Also

இஸ்லாமிய பார்வையில் நம்பிக்கை துரோகம் (v)

வழங்கியவர்: மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன், இஸ்லாமிய அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவூதி அரேபியா – நாள்: ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *