Home / கேள்வி - பதில் / [கேள்வி-பதில்] : ஜனாஸா – குளிப்பாட்டுதல்-கஃபனிடுதல்-சுமந்து செல்தல்

[கேள்வி-பதில்] : ஜனாஸா – குளிப்பாட்டுதல்-கஃபனிடுதல்-சுமந்து செல்தல்

ஜனாஸாவை குளிப்பாட்டுவதிலோ, கஃபனிடுவதிலோ, சுமந்து செல்வதிலோ நன்மைகள் உண்டு என்பதற்கான ஆதாரங்கள் ஹதீஸில் உள்ளதா ?

முஸ்தத்ரகல் ஹாதிமிலே 1307 -ஆவது இலக்கத்திலே வரக்கூடிய “ஹஸன்” தரத்திலான செய்தி :

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அபூராஃபிஃ (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

எவர் ஒருவர் ஒரு மய்யித்தை நல்லமுறையில் குளிப்பாட்டுகிறாரோ, அதன்பின் அம்மய்யித்தின் குறைகளை மறைக்கிறாரோ, அவரது பாவங்களை நாற்பது (40) முறை அல்லாஹ் மன்னிக்கிறான். எவர் ஒருவர் ஒர் மய்யித்தை கஃபனிடுகிறாரோ, அவருக்கு மறுமையில் சொர்க்கத்தின் பட்டாடைகளை அணிவிப்பான், மேலும் எவர் ஒருவர் ஒரு மய்யித்திற்காக கபுரை தோண்டுகிறாரோ, மேலும் அதில் ஒரு மய்யித்தை நல்ல முறையில் அடக்கிவிடுகிறாரோ, அவருக்கு “ஒரு ஏழையை வசதியோடு ஒரு வீட்டில் வாழவைத்த நன்மை” அவருக்கு [ “ஸதக்கத்துல்-ஜாரியா” ] நிரந்தர நன்மையாக மறுமை நாள் வரை வந்துகொண்டே இருக்கும் என ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மிகவும் அருமையான செய்தி, அதிலும் பிரதானமானதுதான் “நாற்பது (40) முறை அவரது பாவங்கள் மன்னிக்கப்படும்” என்பதாகும். இந்த ஒரு செய்தியைத்தான் ஆதாரப்பூர்வமானதாக காணமுடிகிறது.

எழுத்தாக்கம் :
உம்முஷைமா

 

About முஜாஹித் இப்னு ரஸீன்

Check Also

ஜனாஸா தொழுகை (வீடியோ)

வாராந்திர பயான் நிகழ்ச்சி வழங்கியவர்: மௌலவி யாஸிர் ஃபிர்தௌஸி, அழைப்பாளர், ஜுபைல் தஃவா நிலையம். நாள் : 20-02-2014 வியாழக்கிழமை ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *