Breaking News
Home / அகீதா 200 கேள்விகள் / [கேள்வி-33/200]: ஹஜ் கடமையாவதற்கான ஆதாரங்கள் யாவை?

[கேள்வி-33/200]: ஹஜ் கடமையாவதற்கான ஆதாரங்கள் யாவை?

அல்லாஹ் கூறுகின்றான் :

وَاَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلّٰهِؕ

١٩٦﴾ سورة البقرة ﴿

அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும், உம்ராவையும் முழுமைப்படுத்துங்கள் ( அல்பகரா 2 : 196 )

மேலும் அல்லாஹ் கூறுகின்றான் :

فِيهِ آيَاتٌ بَيِّنَاتٌ مَّقَامُ إِبْرَاهِيمَ ۖ وَمَن دَخَلَهُ كَانَ آمِنًا ۗ وَلِلَّـهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا ۚ وَمَن كَفَرَ فَإِنَّ اللَّـهَ غَنِيٌّ عَنِ الْعَالَمِينَ

٩٧﴾ سورة البقرة ﴿

அதில் தெளிவான அத்தாட்சிகளும் இருக்கின்றன. இப்ராஹீம் (தொழுகைக்காக) நின்ற இடமும் இருக்கின்றது. எவர் அதில் நுழைகின்றாரோ அவர் (பாதுகாப்பு பெற்று) அச்சமற்றவராகி விடுகின்றார். ஆகவே, எவர்கள் அங்கு பிரயாணம் செல்ல சக்தி உடையவர்களாக இருக்கின்றார்களோ அத்தகைய மனிதர்கள் மீது அல்லாஹ்வுக்காக (அங்குச் சென்று) அந்த ஆலயத்தை ஹஜ் செய்வது கடமையாகும். எவரேனும் (இதை) நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்கு ஒன்றும் குறைந்து விடுவதில்லை. ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் உலகத்தாரின் தேவையற்றவனாக இருக்கின்றான். ( ஆலு இம்ரான் 3:97)

இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.

‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத்து வழங்குதல், ஹஜ் செய்தல், ரமாலானில் நோன்பு நோற்றல், ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (புகாரி).

சஅத் பின் உபைதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் “இஸ்லாம் (எனும் மாளிகை) ஐந்து (தூண்கள்)மீது எழுப்பப்பட்டுள்ளது. அவை: 1.இறைவன் ஒருவன் என ஏற்பது. 2. தொழுகையைக் கடைப் பிடிப்பது. 3. ஸகாத் வழங்குவது. 4. ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது. 5. ஹஜ் செய்வது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்றார்கள்.( முஸ்லிம் )

 

About நிர்வாகி

Check Also

உம்ரா, ஹஜ் ஆகியவற்றை எத்தனை முறை செய்யலாம் ? ஓரிரு முறைகள் செய்வது போதுமானதில்லையா ?

கேள்வி-பதில் நிகழ்ச்சி – மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன், அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம் – நாள்: 10 ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *