Breaking News
Home / கேள்வி - பதில் / [கேள்வி-பதில்] : மஹ்ரம் அல்லாதவர் நமது வீட்டில் இருக்கும்போது பெண்கள் எவ்வாறு நடந்து கொள்வது ?

[கேள்வி-பதில்] : மஹ்ரம் அல்லாதவர் நமது வீட்டில் இருக்கும்போது பெண்கள் எவ்வாறு நடந்து கொள்வது ?

பொதுவாக பெண்கள் மஹ்ரம் அல்லாதவர்களோடு வீட்டில் இருக்கும் சூழ்நிலையில் மார்க்க வரம்பின்படி தங்களது ஆடை ஒழுக்கங்களைப் பேண வேண்டும். அதாவது அலங்கார ஆடைகளை தவிர்தவர்களாக, அபாயா / புர்கா அணிந்தவர்களாக, தங்களது தலை, கைகளை ஆடைகளால் மறைத்தவர்களாக இருத்தல் வேண்டும். கணவரின் சகோதரர்களோ, ஏனைய மஹ்ரம் அல்லாதவர்களோடு ஒரே வீட்டில் வசிக்கும் நிலை இருந்தால், அதை முற்றிலுமாக தவிர்த்தல் வேண்டும். கணவன் மனைவிக்கிடையே, இவ்விசயங்கள் ஆலோசிக்கப்பட்டு, தனி வீட்டில் வசிப்பதற்கான ஏற்பாடுகளை உடனடியாக செய்வதே நன்மை பயக்கும். கணவனின் சகோதரர்கள் என்பது மரணத்திற்கு ஒப்பாகும் என்பது நபிமொழி. நமது குடும்ப பழக்கம் என்றோ, நம்பிக்கையான உறவுகள் என்றோ நாமாக காரணங்களைக் காட்டி, சேர்ந்து வாழ்வது கூடாது. மார்க்கம் எதை தடை செய்து விட்டதோ, அதை நமது சுய அறிவைக்கொண்டு ஆகுமானதாக்குதல் மார்க்கத்திற்கு முரணாகும்.

எனவே மார்க்கப்பற்றோடும், இறையச்சத்தோடும் வாழக்கூடிய நாம், இதுபோன்ற சூழ்நிலைகளிலிருந்து விலகியிருப்பதும், அல்லாஹ்வும், அவனது தூதரும் அறிவுருத்துகின்ற முறைப்படி வாழ்வதுமே சிறந்ததாகும். அதுவே ஈருலக வெற்றியைத்தரும். அல்லாஹ் மிகவும் அறிந்தவன்.

About முஜாஹித் இப்னு ரஸீன்

Check Also

ஹஜ்ஜின் ஒழுங்குகளும் – தவறுகளும் ( தொடர் 01)

ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் பேணவேண்டிய ஒழுக்கங்களும் தவிர்க்க வேண்டிய தவறுகளும் – தொடர்  –1 ஹஜ்ஜும் உம்ராவும் நற்கூலிகளை பெற்றுத் தரும்   மிக ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *