Breaking News
Home / அகீதா-கொள்கை / மூன்று அடிப்படைகள் [ பாகம்-1 ]

மூன்று அடிப்படைகள் [ பாகம்-1 ]

ஆசிரியர் அறிமுகம்

இமாம் அவர்களின் பெயர், ஷைகுல் இஸ்லாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் இப்னு சுலைமான் இப்னு அலீ இப்னு முஹம்மது இப்னு அஹ்மது இப்னு ராஷிது இப்னு பரீது இப்னு முஹம்மது முஷ்ரிஃப் இப்னு உமர். இவர் தமீம் வமிசத்தைச் சேர்ந்தவர்.

நஜ்து மாகாணத்தில் உயைனா எனும் ஊரில் ஹிஜ்ரீ 1115 ஆம் ஆண்டு பிறந்தார்.

பத்து வயதை அடைவதற்கு முன்பே குர்ஆனை மனனம் செய்து, பின்னர் மார்க்கக் கல்விகளைத் திறம்படக் கற்றார்.

ஹிஜ்ரீ 1153 ஆம் ஆண்டிலிருந்து பகிரங்கமாக ஏகத்துவ அழைப்பை விடுத்தார். அனாசாரங்களையும் கப்ரு வழிபாடுகளையும் எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார்.

இவரின் முயற்சிக்கு அல்லாஹ் வெற்றியை வழங்கினான். கப்ருகளை வணங்கிவந்த பலர், வணக்க வழிபாடுகளை அல்லாஹ்விற்கு மட்டும் தூய்மைப்படுத்தினார்கள். அனாசாரங்களை விட்டு நபிவழிக்குத் திரும்பினார்கள்.

இமாம் அவர்கள் தங்களின் வாழ்க்கையை முழுமையாக மார்க்கப் பணிக்கே அர்ப்பணித்தார்கள். பல எதிர்ப்புகளைச் சந்தித்தார்கள். இறுதியில் அவர்களின் உழைப்புக்கு அல்லாஹ் வெற்றியை அளித்தான். இன்று தூய இரு நகரங்களைத் தன்னில் கொண்ட ஏகத்துவ ஆட்சி நடைபெறுகின்ற சவூதி நாடு அவர்களின் அழைப்புப் பணிக்கு அல்லாஹ் கொடுத்த வெற்றியே ஆகும்.

அரும்பெரும் பல நூற்களை எழுதிய இமாம் அவர்கள் ஹிஜ்ரீ 1206 ஆம் ஆண்டு இறந்தார்கள். அல்லாஹ் அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக!

மொழிபெயர்ப்பாளர்.

பதிப்புரை

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவன்தான் நேர்வழி காட்டுபவன். அவன் அருளும் உதவியுமின்றி நன்மை எதையும் செய்ய முடியாது; பாவத்திலிருந்து தப்பிக்க முடியாது, அவன்தான் இறைவன்; வணங்குவதற்குத் தகுதியானவன்; அவனுக்கு இணை, துணை இல்லை. முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள் என்று சாட்சி கூறுகிறோம்.

இதற்கு முன் பல நூற்களை வெளியிட அல்லாஹ் அருள் புரிந்தது போல் இந்நூலை வெளியிடவும் அவன் அருள் புரிந்துள்ளான். எல்லா முஸ்லிம்களும் கற்றுச் செயல்பட வேண்டிய பல அரிய விஷயங்கள் இதில் உள்ளன. கல்வி கற்கின்ற மாணவர்கள், புதிதாக இஸ்லாமை ஏற்றுக் கொண்ட வர்கள் மற்றும் இஸ்லாமிய அடிப்படையை அறிய விரும்புபவர்கள் என அனைவருக்கும் இந்நூல் மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது.

இமாம் அவர்கள் ஆழ்ந்த கல்வி ஞானம் உள்ளவர்களாக இருந்ததால் மார்க்க அடிப்படைகளை மிகத் துல்லியமாக இந்நூலில் விவரித்துள்ளார்கள். இதைத் தொடர்ந்து அவர்களின் அனைத்து நூற்களையும் தமிழில் கொண்டு வருகிற முயற்சியில் நாங்கள் இருக்கிறோம். அல்லாஹ்தான் அதற்கு உதவவேண்டும். எங்கள் பணியை எளிதாக்கித் தரவேண்டும்.

கல்வி ஆழமற்ற ஆலிம்களின் தவறான பிரச்சாரத்தால் பலர் இமாம் அவர்களைப் பற்றி தவறாகப் புரிந்து வைத்துள்ளார்கள். அத்தகைய வர்களும் இந்நூலைப் படிக்கும்போது தங்களின் தவறான எண்ணத்தைத் திருத்திக் கொள்ள நிச்சயம் வாய்ப்புண்டு.

அல்லாஹ்வே எங்களிடமிருந்து இதை ஏற்றுக்கொள்! எங்கள் பாவங்களை மன்னித்துவிடு! நீயே மகா கருணையாளன்!

உமர் ஷரீஃப் இப்னு அப்துஸ்ஸலாம்
அல்குர்ஆன் மற்றும் நபிமொழிப் பணியாளன்
தாருல் ஹுதா, சென்னை1.

_________________________

بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் பெயரால் …

اعْلمْ رَحِمَكَ اللهُ أَنَّهُ يَجِبُ عَلَيْنَا تَعَلُّمُ أَرْبَع مَسَائِلَ المسألة الأُولَى الْعِلْمُ وَهُوَ مَعْرِفَةُ اللهِ وَمَعْرِفَةُ نَبِيِّهِ ﷺ وَمَعْرِفَةُ دِينِ الإِسْلامِ بالأَدِلَّةِ المسألة الثَّانِيَةُ الْعَمَلُ بِهِ المسألة الثَّالِثَةُ الدَّعْوَةُ إِلَيْهِ المسألة الرَّابِعَةُ الصَّبْرُ عَلَى الأَذَى فِيهِ

வெற்றிக்குரிய நான்கு அம்சங்கள் :

اعْلمْ رَحِمَكَ اللهُ أَنَّهُ يَجِبُ عَلَيْنَا تَعَلُّمُ أَرْبَع مَسَائِلَ

அறிந்துகொள்! அல்லாஹ் உனக்கு கருணை காட்டட்டும். நான்கு   விஷயங்களைக் கற்றுக்கொள்வது நம்மீது கடமையாக இருக்கிறது.

المسألة الأُولَى الْعِلْمُ وَهُوَ مَعْرِفَةُ اللهِ وَمَعْرِفَةُ نَبِيِّهِ ﷺ وَمَعْرِفَةُ دِينِ الإِسْلامِ بالأَدِلَّةِ

1. முதலாவது விஷயம் அல்இல்மு : அதாவது

(அ) அல்லாஹ்வை அறிவது
(ஆ) அவனுடைய தூதரை அறிவது
(இ) இஸ்லாமிய மார்க்கத்தை அறிவது

இவை அனைத்தையும் ஆதாரத்துடன் அறிய வேண்டும்.

المسألة الثَّانِيَةُ الْعَمَلُ بِهِ

2. இரண்டாவது விஷயம் அல்அமல் : அதைக்கொண்டு (அறிந்து கொண்ட விஷயங்களின்படி) செயல்பட வேண்டும்.

المسألة الثَّالِثَةُ الدَّعْوَةُ إِلَيْهِ

3. மூன்றாவது விஷயம் அத்தஃவா : மக்களை இவற்றின் பக்கம் அழைக்க வேண்டும்.

المسألة الرَّابِعَةُ الصَّبْرُ عَلَى الأَذَى فِيهِ

4. நான்காவது விஷயம் அஸ்ஸப்ர் : அதில் (இவற்றைக் கடைப் பிடிக்கும்போது ஏற்படும்) இன்னல்களைச் சகித்துக் கொள்ள வேண்டும்.

وَالدَّلِيلُ قَوْلُهُ تَعَالَى

ஆதாரம்: உயர்ந்தோன் அவனுடைய கூற்று :

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் பெயரால்…

وَالْعَصْرِ إِنَّ الإِنسَانَ لَفِي خُسْرٍ إِلاَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ 

காலத்தின் மீது சத்தியமாக! மனிதன் நிச்சயமாக நஷ்டமடைந்துவிட்டான். ஆயினும், எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களையும் செய்து, சத்தியத்தை ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, சகித்துக் கொள்ளுமாறும் ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து வந்தார்களோ, அவர்களைத் தவிர. (அல்குர்ஆன் 103:13)

قَالَ الشَّافِعيُّ رَحِمَهُ الله تَعَالَى

இமாம் ஷாஃபிஈ (ரஹ்) கூறுகிறார்கள்:

لَوْ مَا أَنْزَلَ الله حُجَّةً عَلَى خَلْقِهِ إِلا هَذِهِ السُّورَةَ لَكَفَتْهُمْ

“அல்லாஹ் தன் படைப்பினத்திற்கு இந்த சூராவைத் தவிர வேறு ஆதாரத்தை இறக்கி வைக்கவில்லை என்றாலும் இதுவே அவர்களுக்குப் போதுமானதாகும்.”

وَقَالَ البُخَارِيُّ رَحِمَهُ اللهُ تَعَالَى

இமாம் புஹாரீ (ரஹ்) கூறுகிறார்கள் :

بَابُ: العِلْمُ قَبْلَ القَوْلِ وَالْعَمَلِ

பாடம் “சொல் மற்றும் செயலுக்கு முன் கல்வி கற்றுக்கொள்ள வேண்டும்.”

وَالدَّلِيلُ قَوْلُهُ تَعَالَى

ஆதாரம்: உயர்ந்தோன் அவனுடைய கூற்று :

فَاعْلَمْ أَنَّهُ لاَ اِلهَ إِلاَّ الله وَاسْتَغْفِرْ لِذَنْبِكَ

(நபியே!) நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறோர் இறைவன் இல்லை என்பதை நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். உங்களது தவறுகளுக்காக மன்னிப்புக் கேளுங்கள்.” (அல்குர்ஆன் 47:19)

فَبَدَأَ بِالْعِلْمِ قَبْلَ القَوْلِ وَالعَمَلِ

சொல் மற்றும் செயலுக்கு முன் கல்வியையே அல்லாஹ் ஆரம்பமாகக் கூறி இருக்கிறான்.

தொடரும் …

About உமர் ஷரீஃப்

Check Also

அழைப்பாளர்களின் கனிவான கவனத்திற்கு … (v)

மவ்லவி முபாரக் மஸூத் மதனீ, இஸ்லாமிய அழைப்பாளர், இலங்கை – நாள்: 16-4-2019 செவ்வாய் கிழமை – இடம் : ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *