தவக்குல் – பொறுப்புச் சாட்டுதல் (வீடியோ)

சுமார் நான்காயிரம் பேர் கொண்ட கூட்டம் ஹுனைன் எனும் இடத்தில் முஸ்லிம்களை தாக்குவதற்காக போருக்கு தயாரானார்கள். எனவே போர் செய்யவேண்டிய நிர்பந்தம் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டு, போருக்காக 12000 சஹாபாக்கள் செல்கின்ற நேரத்தில், சஹாபாக்களுடைய உள்ளத்தில் எதிரிகள் நம்மைவிட எண்ணிக்கையில், மிகக்குறைவு என்ற எண்ணம் ஏற்பட்டது. இதற்குக்கராணம், முந்தைய காலங்களில் பல போர்களில் முஸ்லிம்கள் எண்ணிக்கை குறைவாக இருந்த நிலையிலும் மகத்தான வெற்றியை இறைவன் அருளினான். (உதாரணம், பத்ருபோரில், சுமார் 300 பேர் கொண்ட சஹாபா கூட்டம், 2000 பேர் கொண்ட ...

மேலும் காண

லைலதுல் கத்ருடைய இரவுகள் (வீடியோ)

லைலதுல் கத்ருடைய இரவு என்பது ஆயிரம் மாதங்களுக்கு சமமானது. அதாவது, இந்த இரவை தனது நல்லமல்களால் முழுமையாக பெற்றுக்கொண்டவர் தொடர்ந்து 83 வருடங்கள் இறைவனை வணங்கியவர் போலாகும். நபி(ஸல்) அவர்கள் , “எனது உம்மத்துக்களின் வாழ்க்கையின் அளவு 60க்கும் 70க்கும் இடைப்பட்டதாகும்” என்று சொன்னார்கள். இப்படி வாழ்க்கை முழுவதும் நல்லறங்களில் கழித்த நன்மையை ஒரு இரவில் பெற வேண்டுமானால்…. (தொடர்க…) வழங்கியவர்: அஷ்ஷைஹ் அஸ்ஹர் ஸீலானி, அழைப்பாளர், கோபர் தஃவா நிலையம்.   [youtube id=Xg0_YpR5-c8]  

மேலும் காண

குர்ஆனோடு பேசுங்கள் (வீடியோ)

மனிதன் தனது உள்ளத்தில் தோன்றும் கேள்விகளுக்கு விடை பெறும்போது அவனது அறிவு விரிவடைகிறது. ஆனால் மனிதன் பொதுவாக  தனது இறைநம்பிக்கை விஷயத்தில் மட்டும், தனது  இறைவேதம் என எதை நம்புகிறானோ அதைப்பற்றி கேள்வி கேட்பதில் மட்டும் சற்று தயக்கம் உடையவனாகவே இருக்கிறான். ஏனைய மத வேதங்களைவிட, இஸ்லாமிய  மார்க்கத்தின் இறைவேதமாகிய குர்ஆன் மட்டும்தான் தன்னைப்பற்றி சிந்திக்கும்படியும், ஆய்வு செய்யும்படியும், படிப்பினை பெறும்படியும் அறிவுறுத்துகிறது. இத்தகைய குர்ஆனை நோக்கி நாம் கேட்கும் கேள்விகளுக்கு, அது சரியான பதிலையும், வழிகாட்டுதலையும் தருகிறது. ...

மேலும் காண

சுவனத்தை நோக்கி….. (வீடியோ)

ஒருமுறை அனஸ் (ரழி) அவர்கள் அண்ணலாரிடம், “அல்லாஹ்வின் தூதரே! நான் சொர்க்கம் செல்வதற்கு மறுமையில் தாங்கள் எனக்கு அல்லாஹ்விடம் ஷஃபாஅத் (சிபாரிசு) செய்யவேண்டும்” என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் “நிச்சயமாக நான் உமக்கு அல்லாஹ்விடம் சிபாரிசு செய்வேன்” என்று சொன்னார்கள். உடனே அனஸ் (ரழி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாளில் நான் தங்களை எந்த இடத்தில் சந்திப்பது? என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், ” மறுமையில் ‘ஸிராத்’ எனும் பாலத்திற்கு அருகில் நீர் ...

மேலும் காண

நரகத்தை அஞ்சிக்கொள்ளுங்கள் (v)

ஒரு ஸஹாபி அண்ணலாரிடம் ” யா ரசூலுல்லாஹ்! என்னிடம் சில அடிமைகள் இருக்கிறார்கள். அவர்கள் எனக்கு துரோகம் செய்கிறார்கள், என்னை பொய்ப்படுத்துகிறார்கள், நான் எதையாவது செய்தால் எனக்கு மாறு செய்கிறார்கள். அதனால் நான் ஆத்திரத்தில் அவர்களை அடித்துவிடுகிறேன். திட்டிவிடுகிறேன். இதைப்பற்றி நீங்கள் என்ன நினைகிறீர்கள் ” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ” உனது அடிமைகளை நீர் அடிப்பதும், திட்டுவதும் அவர்கள் செய்த துரோகத்திற்கு அதிகமாக இருக்குமானால், ...

மேலும் காண