பெருநாள் தொழுகையின் சட்டங்கள் (வீடியோ)

இஸ்லாமிய மார்க்கத்தில் கொண்டாடுவதற்கு அனுமதிக்கப்பட்ட நாள்கள் இரண்டு பெருநாள்கள் மட்டுமே. அவ்விரண்டு பெருநாள் தொழுகையின் சட்டங்கள், குர்ஆன் வசனங்கள்,  நபிகளாரின் வழிமுறை, இந்த நாள்களில்  மார்க்கம் நமக்கு எதை அனுமதிக்கிறது, தவிர்க்கவேண்டிய விஷயங்கள் என்ன, போன்றவற்றின்  தொகுப்பு. ரமழான் முழு இரவு நிகழ்ச்சி – ஜுபைல் தஃவா நிலையம். வழங்கியவர்: அஷ்ஷைஹ் யாஸிர் ஃபிர்தௌசி, அழைப்பாளர், ஜுபைல். நாள்: 01 ஆகஸ்டு 2013 வியாழன் இரவு இடம்: SKS கேம்ப் – ஜுபைல் 2   [youtube id=rQljXF4GmZI]

மேலும் காண

சதக்காவை முற்படுத்துங்கள் (வீடியோ)

மனிதன் தனது மரண தருவாயில், இறைவனிடம் “இறைவா ! எனது உயிரை சிறிது விட்டுவைக்கக் கூடாதா? நீ சிறிது நேரம் தவணையளித்தால் உனது திருப்பொருத்தத்தை நாடியவனாக, எனது செல்வங்கள் அனைத்தையும் உனது வழியில் தானதர்மங்கள் செய்து விட்டு  நல்லடியானாக உன்னிடம் வந்துவிடுகிறேன் ” என்று சொல்வான். ஆனால் இறைவனின் அழைப்பு வந்துவிட்டால் ஒரு நொடி முந்தவோ, பிந்தவோ முடியாது.”  மனிதன் தனது இறுதி நிலையிலும் தர்மத்தால் தன்னை பாதுகாத்துக்கொள்ள நினைக்கிறான். இத்தகைய தர்மத்தின் வழிமுறைகளைப்பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது..?….(தொடர்க….) ...

மேலும் காண

தவக்குல் – பொறுப்புச் சாட்டுதல் (வீடியோ)

சுமார் நான்காயிரம் பேர் கொண்ட கூட்டம் ஹுனைன் எனும் இடத்தில் முஸ்லிம்களை தாக்குவதற்காக போருக்கு தயாரானார்கள். எனவே போர் செய்யவேண்டிய நிர்பந்தம் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டு, போருக்காக 12000 சஹாபாக்கள் செல்கின்ற நேரத்தில், சஹாபாக்களுடைய உள்ளத்தில் எதிரிகள் நம்மைவிட எண்ணிக்கையில், மிகக்குறைவு என்ற எண்ணம் ஏற்பட்டது. இதற்குக்கராணம், முந்தைய காலங்களில் பல போர்களில் முஸ்லிம்கள் எண்ணிக்கை குறைவாக இருந்த நிலையிலும் மகத்தான வெற்றியை இறைவன் அருளினான். (உதாரணம், பத்ருபோரில், சுமார் 300 பேர் கொண்ட சஹாபா கூட்டம், 2000 பேர் கொண்ட ...

மேலும் காண

லைலதுல் கத்ருடைய இரவுகள் (வீடியோ)

லைலதுல் கத்ருடைய இரவு என்பது ஆயிரம் மாதங்களுக்கு சமமானது. அதாவது, இந்த இரவை தனது நல்லமல்களால் முழுமையாக பெற்றுக்கொண்டவர் தொடர்ந்து 83 வருடங்கள் இறைவனை வணங்கியவர் போலாகும். நபி(ஸல்) அவர்கள் , “எனது உம்மத்துக்களின் வாழ்க்கையின் அளவு 60க்கும் 70க்கும் இடைப்பட்டதாகும்” என்று சொன்னார்கள். இப்படி வாழ்க்கை முழுவதும் நல்லறங்களில் கழித்த நன்மையை ஒரு இரவில் பெற வேண்டுமானால்…. (தொடர்க…) வழங்கியவர்: அஷ்ஷைஹ் அஸ்ஹர் ஸீலானி, அழைப்பாளர், கோபர் தஃவா நிலையம்.   [youtube id=Xg0_YpR5-c8]  

மேலும் காண

குர்ஆனோடு பேசுங்கள் (வீடியோ)

மனிதன் தனது உள்ளத்தில் தோன்றும் கேள்விகளுக்கு விடை பெறும்போது அவனது அறிவு விரிவடைகிறது. ஆனால் மனிதன் பொதுவாக  தனது இறைநம்பிக்கை விஷயத்தில் மட்டும், தனது  இறைவேதம் என எதை நம்புகிறானோ அதைப்பற்றி கேள்வி கேட்பதில் மட்டும் சற்று தயக்கம் உடையவனாகவே இருக்கிறான். ஏனைய மத வேதங்களைவிட, இஸ்லாமிய  மார்க்கத்தின் இறைவேதமாகிய குர்ஆன் மட்டும்தான் தன்னைப்பற்றி சிந்திக்கும்படியும், ஆய்வு செய்யும்படியும், படிப்பினை பெறும்படியும் அறிவுறுத்துகிறது. இத்தகைய குர்ஆனை நோக்கி நாம் கேட்கும் கேள்விகளுக்கு, அது சரியான பதிலையும், வழிகாட்டுதலையும் தருகிறது. ...

மேலும் காண