வீணாகும் காலங்கள் (வீடியோ)

நமது வாழ்க்கையின் பெரும்பகுதியான காலங்கள் நாம் அறிந்தோ, அறியாமலோ, நிச்சயமாக வீணான காரியங்களில் கழிந்துவிடுகிறது. காலம் பொன் போன்றது என்ற பழமொழி கூட பொய்யானதுதான். ஏனெனில் பொன்னை இழந்துவிட்டால் மீண்டும் பெற்றுக்கொள்ள வழிகளுண்டு, ஆனால் கடந்துபோன காலத்தின் ஒருவிநாடியைக்கூட எவராலும் மீண்டும் பெற்றுக்கொள்ள முடியாது. இத்தகைய பெருமதிமிக்க காலத்தை நாம் எவ்வாறு வீணடித்துக்கொண்டிருக்கிறோம், இதற்கு இஸ்லாம் கூறும் தீர்வென்ன என்பதை இவ்வுரையிலே காணலாம். வழங்கியவர்: அஹ்மத் பாகவி. இஸ்லாமிய அழைப்பு ...

மேலும் காண

அழைப்புப்பணியில் பொறுமை (வீடியோ)

இஸ்லாமிய மார்க்கத்தின்பால் மக்களை அழைக்கக்கூடியவர்களின் சொல்லும், செயலும், பண்புகளும் அழைக்கப்படுபவர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. அல்லாஹ்வுடைய தூதர் நபி (ஸல்) அவர்களின் அழகிய பண்புகள்தான் மக்களை இஸ்லாத்தின்பால் ஈர்ப்பதற்கு பிரதான காரணமாக அமைந்தது. அழைப்புப்பணியில் ஈடுபடக்கூடிய ஒவ்வொருவரும் சோதனைகள் ஏற்படும்போது எந்த அளவிற்கு பொறுமையுடன் செயல்பட வேண்டும் என்பதை தெளிவான ஆதாரங்களோடு எடுத்துரைக்கிறார் மௌலவி. ஸமீன் நஜாஹி அவர்கள். வழங்கியவர்: மௌலவி. ஸமீன் நஜாஹி, அழைப்பாளர், ஜுபைல் தஃவா நிலையம் ...

மேலும் காண

ஈமானிய அம்சங்கள் (உரைநடை)

ஈமான் எனும் பதம், மொழி ரீதியாக நம்பிக்கை எனும் கருத்தைக் கொண்டுள்ளது. ஷரீஅத்தின் கண்ணோட்டத்தில் அதன் கருத்து, நாவினால் விசுவாசப் பிரமாணத்தை மொழிந்து, உள்ளத்தால் பூரணமாக நம்பி, புலன் உறுப்புக்களால் அதன்படி செயற்படுவதாகும். இறை விசுவாசமானது இறைவழிபாட்டின் மூலம் அதிகரிக்கும். அவ்வாறே, இறைவனுக்கு மாறு செய்வதன்மூலம் குறைந்துவிடும் என்பதாகும். எமது ஆத்மா இறைவனுடன் சிறந்ததொரு நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்கின்ற விதத்திலும், மறுமையில் நாம் நிச்சயமாக நமது இறைவனை சந்திப்போம் என்பதில் அசையாத, ...

மேலும் காண

குர்ஆன், ஹதீஸை அணுகும் முறை (வீடியோ)

குர்ஆன் ஹதீஸை எப்படி விளங்கவேண்டும், உதாரணமாக ஹஜ், உம்ராவில் செய்யும் ஸஈ எனும் தொங்கோட்டம் பற்றிய விளக்கம், மற்றும் ஸஹாபாக்கள், தாபியீன்கள் எப்படி குர்ஆன் ஹதீஸை விளங்கினார்கள் என்பனபோன்ற எண்ணற்ற பல தகவல்களை இவ்வுரை தருகிறது வழங்கியவர்: மௌலவி, ஜமால் முஹம்மது மதனீ, அழைப்பாளர், யான்பு, சஊதி அரேபியா நாள்: 12-04-2012 வியாழக்கிழமை இடம்: மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) ஜும்ஆ மஸ்ஜித். [youtube id=PuKwUGopfnU]

மேலும் காண

நரகத்தின் தன்மை (வீடியோ)

அல்லாஹ்வையும், அவனது தூதரையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டு, அவனளித்த வேதமான குர்ஆனையும், அவனது தூதரின் வழிமுறையையும் யார் பின்பற்றி நடக்கிறார்களோ அவர்களுக்குத்தான் அல்லாஹ் நாடினால் சொர்க்கம் கிடைக்கும். ஆனால் இதற்கு மாறாக இறைவனை நம்பிக்கை கொள்ளாமலோ, இறைவனுக்கு இணைவைத்தவராகவோ, தனது மனோஇச்சைப்படி எவர் தனது வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறாரோ அத்தகைய மனிதர்களுக்கு நிச்சயமா அல்லாஹ் நரகத்தை தயார் செய்து வைத்திருக்கிறான். அத்தகைய நரகம் எப்படிப்பட்டது, அதன் தன்மையென்ன என்பதை அறிந்துகொள்ள ...

மேலும் காண