அகீதத்துத் தஹாவிய்யாஹ் – 2 (V)

அகீதா எனும் ஏகத்துவ கொள்கையில் அல்லாஹ்வின் பெயர்களையும், பண்புகளையும், விளக்குகின்ற ஒருபகுதிதான் “அஸ்மா வ ஸிஃப்பாத்” என்பதாகும். இதன் விளக்கம் யாதெனில் குர்ஆன்-ஹதீஸ் வாயிலாக அல்லாஹ் தன்னுடைய பெயர்களாக எதையெல்லாம் தனக்கு சூட்டிக்கொண்டானோ அதை எவ்வித மாற்றமுமின்றி நம்பி ஏற்றுக்கொள்வதும், அல்லாஹ்வின் பண்புகளாக எதையெல்லாம் குர்ஆனும் ஹதீஸும் விளக்கப்படுத்துகிறதோ அதை எவ்வித கூட்டுதல்-குறைத்தல் இன்றி அப்படியே ஏற்றுக்கொள்வதும் ஆகும்.

மேலும் குர்ஆனிலோ – ஹதீஸிலோ வராத பெயர்களைக்கொண்டு அல்லாஹ்வை அழைப்பது கூடாது. அதுபோலவே அவனுக்குரித்தான பண்புகளை பெயர்களாக வைத்து அல்லாஹ்வை அழைப்பதுவும் கூடாது. உதாரணமாக குழந்தைச் செல்வத்தை தருவது அல்லாஹ்வின் பண்புகளில் ஒன்றாகும். இந்த பண்பை பெயராக்கி அல்லாஹ்வை “குழந்தை தருபவனே” என அழைத்தோமானால் அது பாதகமான (ஷிர்க்) இணைவைப்பு ஆகிவிடும். இப்படி “அஸ்மா வ ஸிஃப்பாத்” என்பது ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ……. (தொடர்க….)

இஸ்லாமிய அடிப்படை கொள்கைகள் பற்றிய தொடர்வகுப்பு-2
வழங்கியவர்: அஷ்ஷைஹ் முஜாஹித் இப்னு ரஸீன், இஸ்லாமிய அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவுதி அரேபியா
நாள் : 28-10-2013 திங்கள்கிழமை இரவு
இடம் :ஸாமிஃ துஃஹைர் பள்ளி வகுப்பறை, ராக்கா தஃவா நிலையம், அல்கோபர், சவுதி அரேபியா.

அகீதத்துத் தஹாவிய்யாஹ் – 2  (PDF)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *