இறுதிப்பத்து இரவுகள் (வீடியோ)

ரமளானின் இருதிப்பத்து இரவுகள் மிகவும் சிறப்புக்குரியது. இதில் ஒற்றைப்படை இரவுகளில் லைலதுல் கத்ருடைய இரவை தேடிப்பெற்றுக்கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு ஆர்வமூட்டினார்கள். இருப்பினும் நபியவர்கள் நோன்பு கடமையானதிலிருந்து ஒவ்வொரு ரமளானிலும் கடைசிப்பத்து இரவுகளையுமே உயிர்ப்பித்தார்கள். இந்நாள்களில் நபியவர்கள் தங்களின் கீழாடையை இருகக்கட்டிக்கொள்வார்கள், பத்து நாட்களும் இஃதிகாஃப் இருப்பார்கள், முழு இரவையும் பகலையும் தொழுகையிலும், குர்ஆன் ஓதுவதிலும், திக்ரு செய்வதிலும், துஆ செய்வதிலும் ஈடுபடுவார்கள். ஒற்றைப்படை இரவுகள் என்று நபியவர்கள் ஒருபோதும் பிரித்துக்காட்டி, அமல்களை கூட்டவோ குறைக்கவோ செய்யாமல், 10 இரவுகளையும் தங்களில் அமல்களால் சிறப்பாக்கி, அழகுபடுத்தினார்கள். எனவே, லைலதுல் கத்ருடைய இரவை ஒற்றைப்படை என்று மட்டும் சுருக்கிகொள்ளாமல், இருதிப்பத்து இரவுகளையும் எப்படி சிறப்பாக்க வேண்டும் என்பதை அறிய…… (தொடர்க….)

அஷ்ஷைஹ் முபாரக் மஸ் ஊத் மதனீ, இஸ்லாமிய அழைப்பாளர், இலங்கை
ரமளான் இஃபதார் கூடாரம் – ஜுபைல் தஃவா நிலையம்
நாள்: 27 ஜூலை 2013

[youtube id=fNhNA8EC0P4]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *