இறைத்தூது இஸ்லாத்தின் அடிப்படை (v)

மனிதன் இயற்கையாகவே எதன்பால் தேவையுடையவனாக இருக்கிறானோ. அதைப் புறக்கணித்துவிட்டு, துறவரமாக வாழ்வதற்கு இஸ்லாம் ஒருபோதும் அனுமதிப்பதில்லை. மனிதனுக்கு எது தீங்கு தருமோ அதை அவனிடமிருந்து தடுப்பதிலும் இஸ்லாம் ஒருபோதும் விட்டுக் கொடுப்பதில்லை.

வாழ்க்கையின் முழு பரிணாமத்திலும் வாழ்ந்துகொண்டுதான் வணங்க வேண்டுமே தவிர, வாழ்க்கைதான் வணக்கமாக இருக்க வேண்டுமே தவிர ஒருபோதும் மனிதன் வாழ்வைத்துறந்தவனாக, வணங்குவதை ஒருபோதும் இஸ்லாம் அனுமதிப்பதில்லை.

இஸ்லாத்தின் அடிப்படைகளில் முதல் பிரதானம் “இறைத்தூது ” அதாவது இறைவன் ஒருவனாக இருக்கிறான், அவன் தான் அனைத்தையும் படைத்தான், அவன் தான் அனைத்தையும் நிர்வகிக்கிறான், அவனைமட்டுமே வணங்க வேண்டும். அவன் அல்லாத எதையும் வணங்குவது பெரும்பாவம்.

இரண்டாவது  இஸ்லாம் பூரணமான, தூய்மையான ஒரு வாழ்க்கை முறையை சொல்கிறது. அதை ஏற்றவர்கள் பின்பற்றவேண்டும் என எதிர்பார்க்கிறது. அவ்வாறு பின்பற்றுவதை கடமைப்படுத்துகிறது.

மூன்றாவது இஸ்லாம் தீவிரவாதமாக பார்க்கப்படுவதற்குக் காரணம், பிற மதங்கள் பின்பற்றமுடியாத வெறும் சடங்குகளாக பார்க்கப்படுவதனால், இதற்கு மாற்றமாக் இஸ்லாம் வாழ்வின் அனைத்து விசயங்களுக்கும் வழிகாட்டுவதுபோன்று, அரசியல், ஆட்சி, ராணுவம், குற்றவியல் சட்டங்கள் என அனைத்தையும் தெளிவாகவும் வெளிப்படையாகவும் சொல்வதனால், வெறும் சடங்குகளாகிப்போன தங்களது மதத்தில் சொல்லப்படாதவையாக இது இருக்கிறதே என்ற பார்வைதான் இஸ்லாம் தீவிரவாதமாக் சித்தரிக்கப் படுவதற்குக் காரணம் என்பதையும்  அறிந்துகொள்ள வேண்டும்.

 இஸ்லாமிய அறிமுக நிகழ்ச்சி – உரை: மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன் – நாள்: 10 டிசம்பர் 2015 வியாழன் – இடம்: ஜுபைல் போர்ட் கேம்ப் பள்ளி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *