இறைவனிடம் நாம் செய்த ஒப்பந்தம் (வீடியோ)

ஜாபிர் (ரழி) அவர்கள் கூறினார்கள்:  எனது தந்தை  அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் எனை அழைத்து, “நாளைய உகது யுத்தத்தில் கொள்ளப்படும் நபித்தோழர்களில் நான் முதலாவதாக இருப்பேன் என நினைக்கிறேன். இவ்வுலகில் நபிகளாரைத்தவிர ஒரு கண்ணியமானவராக நான் உன்னைத்தான் விட்டுச்செல்கிறேன். நான் ஒருவருக்கு கடன் கொடுக்கவேண்டி உள்ளது, நான் இறந்துவிட்டால் நீ அதை அடைத்து விடவேண்டும். மேலும் உனது சகோதரிகளாகிய எனது பெண் மக்களிடம் நீ நல்ல முறையில் நடந்துகொள்ள வேண்டும் என்று எனக்கு வசீஅத் செய்தார்கள். மறுநாள் உகது யுத்தம் நடந்து முடிந்த வேளையில், போரில் ஷஹீதான சஹாபாக்கள் கொண்டுவரப்பட்டார்கள். அவர்களில் போரின் முதல் கட்டத்தில் கொல்லப்பட்டவர்களில் எனது தந்தையும் இருந்தார், எனது தந்தையின் முகத்தை பார்ப்பதற்காக, அவரது ஜனாஸா மூடப்பட்ட துணியை விளக்க பலமுறை  எத்தனித்தபோதும், அங்கிருந்த அனைவரும் என்னை தடுத்தனர். அந்தளவிற்கு எனது தந்தையின் உடல் சிதைக்கப்பட்டிருந்தது. அவ்வேளையில் நபிகளார் அவ்விடத்திற்கு வந்தார்கள். வந்தவுடன் ஜனாசாவை உயர்த்துமாறு  கட்டளையிட்டார்கள். அவ்வாறு உயர்த்தப்பட்டவுடன் எங்களில் ஒரு பெண்மணி சத்தமிட்டு அழுதார். இதைக்கேட்ட நபி (ஸல்) அவர்கள் “ஏன் அழுகிறீர்கள், இந்த ஜனாஸா உயர்தப்பபடும்வரை மலக்குமார்கள் தங்கள் இறகுகளால் இந்த ஜனாஸாவுக்கு நிழல் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். எனவே ஏன் அழ வேண்டும்? என்று கேட்டார்கள். அந்த சந்தர்ப்பத்தில் தான் இந்த வசனம் அல்லாஹ்விடமிருந்து அருளப்பட்டது .. அந்த வசனம்தான்….. (தொடர்க….)

[youtube id=yxr5qszqRpI]

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *