இஸ்லாமிய (அகீதா) கொள்கை – 200 வினா விடைகள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் …

அன்பார்ந்த வாசகர்களே…

இஸ்லாமிய கொள்கை (அகீதா) தொடர்பான சுமார் 200 கேள்விகளை அஷ்ஷெய்க்: ஹாபில் இப்னு அஹ்மத் இப்னு அலி அல் ஹகமீ (ரஹ்) அவர்கள் தொகுத்துள்ளார்கள். இதனை இலங்கையை சார்ந்த அப்துல் சத்தார் மதனி M.A ( Edu) Sudan அவர்கள் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்கள்.  இதனை கேள்வி பதில் என்ற அமைப்பில் வெளியிட இருக்கின்றோம் இன்ஷா அல்லாஹ் இத்தொடர் ஈரூலகில் பயன்பெற பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகின்றோம்.

நூலாசிரியர் பற்றிய குறிப்பு

சங்கைமிக்க மார்க்க மேதை அஷ்ஷெய்க் ஹாபில் இப்னு அஹ்மத் இப்னு அலி அல் ஹகமீ” என்பதே இவரது இயற்பெயராகும். ஷெய்க் அவர்கள் “மத்ஹஜ்” கோத்திரத்தின் ஒரு பிரிவான “ஹகம் பின் சஃத் அல் உஷைரா”வுடன் இனைத்து அல்ஹகமி என அழைக்கப் பட்டார். சவுடதி அரேபியாவின் தென்கிழக்கில் உள்ள “ஜாஸான்” இல் அமையப் பெற்ற “அல் மளாயா” நகருக்கு உற்பட்ட “அல்ஸலாம்” கிராமத்தில் ஹிஜ்ரி 1342 ம் வருடத்தில் பிறந்தார்கள். பின்னர் அவரது தந்தையுடன் பிரபல்யமான “சாம்தா” நகரத்துக்குற்பட்ட “அல்ஜாளிஃ” கிராமத்தை நோக்கிப்பயணமானார். அங்கே தாய் தந்தை அரவணைப்பிலே வாழ்ந்து வந்த அவர்கள் அக்கால சமூக வழக்கத்துக்கேட்ப அவரது பெற்றோர்களுக்காக ஆடு வளர்ப்பில் ஈடுபட்டார். எனினும் மனன சக்தியிலும், விவேகத்திலும் அக்கால இளைஞர்களுக்கு மத்தியில் ஒரு அத்தாட்சியாகத் திகழ்ந்தார்கள்.

பனிரெண்டு வயதுக்குள் அல்குர்ஆன் முழுவதையும் மனனம் செய்து முடித்தார்கள். அவரையும் அவரது மற்ற புதல்வரான முஹம்மத் பின் அஹ்மத் என்பரையும் பள்ளிக் கூடத்துக்கு அனுப்பி கல்வியூட்ட விரும்பாத தந்தை அக்கிராமத்தில் வாழ்ந்த அஷ்ஷெய்க் “அப்துல்லா அல் கர்ஆவி” (ரஹ்) என்பவரை அவ்விருவருக்கும் ஆசிரியராக நியமித்தார். பின்னர் இவருடைய தந்தை ஹிஜ்ரி 1360 ம் வருடத்தில் வபாத்தாகவே தனது ஆசிரியருடனே கல்வி கற்க முழு நேரத்தையும் செலவிட்டார்கள்.

அவரைப்பற்றி அவரது ஆசிரியர் பின்வருமாறு கூறுகின்றார்: “அக்காலத்தில் கற்பதிலும் கல்வி போதிப்பதிலும் நூல்கள் இயற்றுவதிலும் நிர்வாகத்திலும் அவருக்கு நிகரான ஒருவர் அப்பிரதேசத்தில் இருக்கவில்லை”. எனவே அவருடைய ஆசிரியர் அவருக்கு தனது செல்வப் புதல்வியைத் திருமணம் செய்து வைத்தார் பின்னர் அவ்விருவரும் மார்க்க அறிவைக் கற்கக்கூடிய (ஸாலிஹான) நல்ல குழந்தைகளை ஈன்றெடுத்தார்கள்.

ஹிஜ்ரி 1362 ம் ஆண்டில் ஷெய்க் “அப்துல்லா அல் கர்ஆவி” அவருடைய மாணவர் “ஹாபில் அல் ஹகமி” என்பவரிடம் நடாத்திய மாதிரிப் பரீட்சையில் “ஸாலிஹான” முன்னோர்களின் இஸ்லாமியக் கொள்கையை ஒரு ஏகத்துவக் கவிதை நூலில் இயற்றுமாறு பணிந்தார்கள் உடனே அவர்கள் أرجوزة سلم الوصول إلى علم الأصول “அடிப்படை அறிவின்பால் அழைத்துச்செல்லும் ஏணி” என்ற கவிதை நூலை இயற்றினார்கள்.

இது தவிர இஸ்லாமிய மதச்சட்டம், அதன் அடிப்படைகள், ஏகத்துவம், நபிகளாரின் வாழ்கை வரலாறு, சொத்துப்பங்கீடு போன்ற துறைகளில் உரை நடையிலும் கவிதை நடையிலும் பல நூல்களை எழுதியுள்ளார். அச்சிலேறிய, அச்சிலேறாத பதினைந்துக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள இவர்கள் தனது இளமையிலே ஹிஜ்ரி 1377 ஆண்டு ஹஜ் கடமைகளை முடித்த பின்னர் புனித மக்கா நகரிலேயே வபாத்தாகி அங்கேயே நல்லடக்கமும் செய்யப்பட்டார்கள். அல்லாஹ் அவரை விசாலமான சுவனபதியில் குடியிருத்துவானாக …

தொடரும் இன்ஷா அல்லாஹ் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *