சவூதிஅரேபியா அல் -ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு சார்பாக “இஸ்லாம் ஓர் அறிமுகம்” என்கின்ற மாற்றுமத சகோதர்களுக்கான நிகழ்ச்சி 12-11-2015 வியாழக்கிழமை இரவு ஜுபைல் மாநகரம் அஜ்மில் கேம்ப் வளாகத்தில் வைத்து சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அல்-ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு (NMD) அழைப்பாளர் மௌலவி ஃபக்ருதீன் இம்தாதி இஸ்லாத்தைப்பற்றிய அறிமுக உரை நிகழ்த்தினார். மெளலவி, பொறியாளர் ஜக்கரியா அவர்கள் மாற்றுமத சகோதர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். நிகழ்ச்சியின் முடிவில் வருகைதந்த அனைத்து மாற்றுமத சகோதர்களுக்கும் சிறப்பு பரிசுகளும், இரவு உணவும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!!