இஸ்லாமும் பாடல்களும் – 2

அல்லாஹ் அல்லாதவர்களால் எதையும் கொடுக்க முடியாது

அல்லாஹ் கூறுவதைக் கேளுங்கள்;

1. ”அவனே இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான், சூரியனையும் சந்திரனையும் தன் அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; இவை அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன, அவனே உங்களுடைய இறைவனாகிய அல்லாஹ்; அரசாட்சிகளெல்லாம் அவனுக்குரியதே, அவனையன்றி நீங்கள் எவர்களை பிரார்த்தி(த்து அழை)க்கின்றீர்களோ, அவர்களுக்கு அணுவளவு அதிகாரமும் இல்லை. நீங்கள் அவர்களைப் பிரார்த்தி(த்து அழை)த்தாலும், அவர்கள் உங்கள் பிரார்த்தனையை (அழைப்பை)ச் செவியேற்கமாட்டார்கள், செவியேற்றாலும் கூட உங்களுக்கு பதில் அளிக்கமாட்டார்கள், கியாம நாளில் நீங்கள் இணைவைத்ததையும் அவர்கள் நிராகரித்து விடுவார்கள்; யாவற்றையும் நன்கு அறிபவனைப் போன்று (அவர்கள்) எவருமே உங்களுக்கு அறிவிக்க மாட்டார்கள்.” (அல்குர்ஆன் 35: 13,14)

2. ”மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது. இன்னும் அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலஹீனர்களே.” (அல்குர்ஆன் 22: 73)

3. ”நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே; நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் – அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்! ”  (7:194)

4. ”நீங்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை கவனித்தீர்களா? பூமியிலுள்ள எதை அவை படைத்துள்ளன, அல்லது அவற்றுக்கு வானங்களில் ஏதாவது பங்கு உண்டா? என்பதை எனக்குக் காண்பியுங்கள்! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், இதற்கு, முன்னேயுள்ள ஒரு வேதத்தையோ அல்லது (முன்னோர்களின்) அறிவு ஞானங்களில் மிஞ்சிய ஏதேனும் பகுதியையோ (உங்கள் கூற்றுக்கு ஆதாரமாக) என்னிடம் கொண்டு வாருங்கள்!” என்று (நபியே!) நீர் கூறுவீராக. கியாம நாள்வரை (அழைத்தாலும்) தனக்கு பதில் கொடுக்க மாட்டாத – அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவர்களைவிட வழி கெட்டவர்கள் யார்? தங்களை அழைப்பதையே அவர்கள் அறியமுடியாது.”   (46:4,5)

5. ”மேலும், அல்லாஹ் உண்மையைக் கொண்டே தீர்ப்பளிப்பவன். அன்றியும், அவனையன்றி அவர்கள் (வேறு) எவர்களை அழைத்(துப் பிரார்த்தித்)தார்களோ, அவர்கள் யாதொரு விஷயத்தைப் பற்றியும் தீர்ப்புச் செய்ய மாட்டார்கள்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவனாகவும், தீர்க்கமாகப் பார்ப்பவனாகவும் இருக்கின்றான். ”  (அல்குர்ஆன் 40: 20 )

விளக்கம்: அல்லாஹ் அல்லாதவர்களிடம் நாம் ஏதாவது ஒரு தேவையைக் கேட்டு பிரார்த்தித்தால் அல்லது ஒரு ஆபத்திலிருந்து பாதுகாப்புத் தேடினால், நாம் அவர்களிடம் கேட்கும் எந்த விஷயத்தையும் அவர்களால் செவிமடுக்கவோ, உணரவோ முடியாது என்பதே ஒரு முஸ்லிமின் நம்பிக்கையாக இருக்க வேண்டும். ஆனால் இதற்கு மாறாக நாம் கப்ரில் உள்ளவர்களிடம் பிராத்தித்தால் அதை அவர்களால் செவிமடுக்கவும் உணரவும் முடியும் என்று மேற்கூறும் பாடல் கூறுகின்றது.

மனமுறண்டாக சொல்லப்படுவதை ஒரு வாதத்திற்கு ஏற்றுக் கொண்டாலும், அவர்களால் நமக்கு எந்த உதவியையும் கியாம நாள் வரை செய்ய முடியாது. அவர்களால் அல்லாஹ்வின் அற்ப படைப்பாகிய ஒரு ஈயைக்கூட படைக்க முடியாது, அவர்களிடமிருந்து ”ஈ” எதையாவது எடுத்துச் சென்றால் அதை அவர்களால் மீட்டவும் முடியாது, இப்படிப்பட்ட இயலாதவர்களிடம் கேட்பவர்களைவிட முட்டாள் யாரும் இருக்க முடியமா? -போன்ற பல உதாரணங்களைக்கூறி சிறுவர்களும் விளங்குமளவிற்கு அல்லாஹ் திருமறையில் தெளிவுபடுத்தியிருக்கின்றான். அல்லாஹ்வின் நல்லடியார்களிடம் பிரார்த்தித்து அல்லாஹ்விற்கு ஷிர்க் வைத்ததையும் அந்த நல்லடியார்கள் நாளை மறுமையில் மறுத்துவிடுவார்கள் என்ற கருத்துக்களை பொதிந்துள்ள எத்தனையோ இறை வசனங்களுக்கு இந்தப் பாடல் முரண்படவில%