ஈமானின் உண்மை நிலை, தெளிவு அதன் நற்பயன்கள்

– முன்னுரை – 

அகிலத்தின் அதிபதியான அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் …

நபிமார்களிலும், இறைத்தூதர்களிலும் சிறந்தவரான முஹம்மத் (ஸல்) அவர்கள்மீதும், அவர்களது தோழர்கள், வழித்தோன்றல்கள், அனைவர் மீதும் ஸலவாத்தும், ஸலாமும் உண்டாவதாக …

அன்புச் சகோதரர்களே !

அல்-குஆனின் கீழ்வரும் வசனங்களை ஆழ்ந்து சிந்தியுங்கள். அல்லாஹ், இப்புனித வேதத்தை மக்களுக்கு ஒளியாகவும், வழிகாட்டியாகவும், உடல் மற்றும் உளவியல் ரீதியான நோய்களுக்கு அருமருந்தாகவும், அறியாமை எனும் இருளிலிருந்து, இறைநம்பிக்கை எனும் ஈமானிய ஒளியின்பால் மனிதர்களை வழி நடத்தும் ஒளி விளக்காகவும் அருளியிருக்கிறான் என்பதை அறிந்து கொள்வீர்கள். கீழ்வரும் இறைமறை வசனத்தை சற்று கவனமுடன் கருத்தூன்றி படித்துப்பாருங்கள்:

Anfaal 8 24

விசுவாசிகளே! உங்களுக்கு வாழ்வு அளிக்கக்கூடியதன் பக்கம் இறைத்தூதர் உங்களை அழைக்கும்போது அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் பதில் கூறுங்கள். நிச்சயமாக, அல்லாஹ் மனிதர்களையும், அவர்களின் உள்ளங்களையும் சூழ்ந்து நிற்கிறான் என்பதையும், நிச்சயமாக அவனிடமே நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள் “                                                                (அன்ஃபால் 8:24)

இவ்வேத வசனம், நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த  வாழ்க்கை முறைதான் உண்மையான, வளம் பொருந்திய, ஈருலகிலும் பயன் தரக்கூடிய வாழ்வாகும் என்பதை உறுதிப்படுத்துகிறது. எனவே, நபிகளாரின் இந்த உண்மை வாழ்க்கை முறையைப் புறக்கணித்து வாழ்பவன், உயிரோடு வாழ்ந்து, தனது அன்றாட நடவடிக்கைகளில் சுறுசுறுப்பாக ஈடுபடுபவனாக இருந்தாலும், அவன் மரணித்தவனாகவே கருதப்படுவான்.

கீழ்வரும் இறைவசனம் இந்த உண்மையை தெளிவுபடுத்துகிறது:

anaam 6 122

இறந்துவிட்ட ஒருவனுக்கு நாம் உயிர் கொடுத்தோம். பின்னர் அவனுக்கு ஓர் ஒளியையும் வழங்கினோம். அதன் உதவியால் அவன் மக்களிடையே நடமாடுகிறான். இப்படிப்பட்டவனும், இருள்களில் சிக்கி எவ்விதத்திலும் அவற்றிலிருந்து வெளியேற முடியாமல் இருப்பவனும் சமம் ஆவார்களா?                                                                                      (அன்ஆம் 6:122)

அன்புச் சகோதரர்களே !

நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டுவந்த வாழ்வின் ஆணிவேர் ஓரிறைக்கொள்கையாகும். அதை  நம்பிக்கை கொண்டு அதன்படி வாழ்வது கட்டாயக் கடமையாகும். இந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே நபியவர்கள் மக்களை நேர்வழியின்பால் அழைத்தார்கள்.

‘ஜா`ஹிலிய்யா’ எனும் அறியாமை இருளிலிருந்து ‘இஸ்லாம்’ எனும் ஒளியின்பால் மக்களை வழினடத்தியதும் இந்த ஓரிறைக்கொள்கையின் அடிப்படையில்தான். ஆகவே இச்சிறிய தொடர் பதிவின் மூலமாக ஈமானைப்பற்றியும், ஈமானின் அறிகுறிகள், அதன் உண்மை நிலை, அதன் விளைவுகள் பற்றியும், இந்த ஈமானின் மூலம் உள ஓளி பெற்றவர்களின் சில முன்மாதிரிகளையும் சுருக்கமாக குறிப்பிட இருக்கிறோம்.

அல்லாஹ்வும், அவனது தூதரும் நேர்வழியின்பால் அழைப்பு விடுத்தபோது, எவ்வித தயக்கமுமின்றி பதில் அளிப்பவர்களே (உள ஒளி பெற்றவர்கள்) நேர்வழி பெற்றவர்கள்.

(தொடர் ….. 01)

Title

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *