அன்பார்ந்தவர்களே !
தங்களை இக்கையேட்டின் வழியாக சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம். இம்மகிழ்வோடு, தங்களை தேடிவந்து சந்திப்பதன் நோக்கம் இதுதான் என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறோம். நாம் ஒரே மண்னை தாயகமாகவும், ஒரே மொழியை தாய் மொழியாகவும் கொண்டவர்களாக வாழ்ந்து வருகிறோம். இதில் நாம் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக் கொள்வதும், ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதும் நமது சமுதாய ஒற்றுமைக்கு வளம் சேர்க்கும் என உறுதியாக நம்புகிறோம்.
உலகில் வாழும் ஒவ்வொருவரும் மொழி, இனம், மதம், கலாச்சாரம் இப்படி எண்ணற்ற விசயங்களில் தங்களுக்கென ஓர் தனியான வாழ்க்கை முறையை பின்பற்றி வாழ்ந்து வருகின்றனர். இருப்பினும் நம்மில் பெரும்பாலோர் தங்களைச்சுற்றி வாழ்கின்ற பிற சமுதாய மக்களைப்பற்றி அறிந்து கொள்ளாமலும், அவர்களைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வமில்லாமலும், இன்னும் நமது பக்கத்து வீட்டில் வாழ்பவர்களைப் பற்றிக்கூட அறிமுகமில்லாத நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பதை காணமுடிகிறது.
இதனால் ஒரு சமூகம் பிற சமூக மக்களைப்பற்றி ……