[கட்டுரை] : அல்லாஹ்வின் முகத்தைக்கொண்டு …

அல்லாஹ்வின் முகத்தைக்கொண்டு என்ற வார்த்தையை பயன்படுத்தி சுவர்க்கத்தை மட்டுமே கேட்க வேண்டும்

عن جابر رضي الله عنه قال‏:‏ قال رسول الله صلى الله عليه وسلم ‏:‏ ‏ “‏لا يسأل بوجه الله إلا الجنة‏”‏ ‏(‏‏ رواه أبو داود‏)‏‏.‏

Jabir (May Allah be pleased with him) said: The Messenger of Allah (ﷺ) said, “No one should ask in the Face of Allah for anything except Jannah.” (Abu Dawud – 1722)

அல்லாஹ்வின் முகத்தைக் கொண்டு ” என சுவர்க்கம் மட்டுமே கேட்கப்பட வேண்டும் என நபியவர்கள் கூறினார்கள் அறிவிப்பவர் : ஜாபிர் (ரழி) நூல் : அபூதாவூத்.

அல்லாஹ்விடம் பிரார்த்தனைகளை முன்வைப்பவர், அல்லாஹ்வின் திரு நாமங்களையும், பண்புகளையும் கண்ணியப்படுத்த வேண்டும். உலக தேவைகள் எதனையும் “அல்லாஹ்வின் முகத்துக்காக” எனக் கேட்கக் கூடாது. மாறாக, மிகவும் முக்கிய தேவையான சுவனத்தையும் அதிலுள்ள சுகபோகங்களையும் மட்டுமே அல்லாஹ்வின் முகத்தைக்கொண்டு கேட்க வேண்டும். மேலும் அல்லாஹ்வின் திருப்தி, அவனது திருமுகத்தைக் காணும் சந்தர்ப்பம், அவனது உரையாடும் இனிய சந்தர்ப்பம் என்பவைகளையே அல்லாஹ்வின் முகத்தைக்கொண்டு கேட்க வேண்டும்.

ஏனைய உலக தேவைகள், அற்ப தேவைகள் என்பனவும் அல்லாஹ்விடமே கேட்கப்பட வேண்டும் என்றிருந்தாலும் அவைகள் அவனது திருமுகத்தைக்கொண்டு என கேட்கப்படக்கூடாது.

அரபு : அஷ்ஷைஹ் அப்துர்ரஹ்மான் அஸ்ஸஃதி (ரஹ்)
மொழிபெயர்ப்பு : எஸ்.எஸ். ரமழான் ஸலஃபி,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *