[கட்டுரை] : ஜனாஸா தொழுகை

ஜனாஸா தொழுகையின் முறை :

முஸ்லிமான ஒருவர் மரணித்தால், அவரது உடலை குளிப்பாட்டி, கஃபனிட்டு, பின்னர் அவருக்காக தொழுது, பின் அவரை அடக்கம் செய்ய வேண்டும்

தொழும் முறை :

தொழுகைக்கு ஒழு செய்வது போன்று ஒழு செய்து, மனதில் நிய்யத் செய்து, ஒருவர் இமாமாக நின்று, மற்றவர்கள் அவருக்கு பின் வரிசையாக (பொதுவான தொழுகைக்கு நிற்பதுபோல) நிற்க வேண்டும். இமாம் “அல்லாஹு அக்பர்” என்று கூறியவராக தக்பீர் கட்ட வேண்டும். அதனைத் தொடர்ந்து “அல்லாஹு அக்பர்” என்று மூன்று முறை சப்தமிட்டு இமாம் கூற வேண்டும்.  (மொத்தம் தக்பீர் நான்கு முறை கூற வேண்டும்) நான்காவது தக்பீருக்குப் பிறகு இமாம் ஸலாம் கூறி தொழுகையை நிறைவு செய்வார்.

ஜனாஸா தொழுகையில்

  • முதல் தக்பீருக்குப்பின் அல்-ஃபாத்திஹா சூராவை ஓத வேண்டும்.
  • இரண்டாவது தக்பீருக்குப்பிறகு நபி (ஸல்) அவர்கள் மீது (அத்தஹியாத்தில் ஓதக்கூடிய அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் என துவங்கும்) ஸலவாத்தை ஓத வேண்டும்.
  • மூன்றாவது தக்பீருக்கு பிறகு மரணித்தவருக்காக பிரார்த்தனை (கீழே கொடுக்கப்பட்டுள்ளது) செய்ய வேண்டும்.
  • நான்காவது தக்பீருக்குப்பிறகு (ஓதுவதற்கென ஏதுமில்லை) இமாமைத்தொடர்ந்து ஸலாம் கூறி தொழுகையை நிறைவு செய்ய வேண்டும்.

ஜனாஸா தொழுகையில் மூன்றாவது தக்பீருக்குப்பிறகு ஓத வேண்டிய துஆ :

عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، سَمِعَهُ يَقُولُ سَمِعْتُ عَوْفَ بْنَ مَالِكٍ، يَقُولُ صَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى جَنَازَةٍ فَحَفِظْتُ مِنْ دُعَائِهِ وَهُوَ يَقُولُ ‏ “‏ اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ وَ مِنْ عَذَابِ النَّارِ ‏”‏ ‏ – صحيح مسلم

அல்லாஹும் மஃபிர்லஹு, வர்ஹம்ஹு, வஆஃபிஹி வஃபுஅன்ஹு, வ அக்ரிம் நுஸ்லஹு, வ வஸ்ஸிஃ முத்ஹலஹு, வஃஸில்ஹு பில்மாயி, வஸ்ஸல்ஜி, வல்பர்த். வனக்கிஹி மினல் ஹத்தாயா, கமா நக்கைதல் தவ்ஃபுல் அப்யழ மின தனஸ். வ அப்தில்ஹு தாரன் ஹைரன் மின் தாரிஹி, வ அஹ்லன் கைரன் மின் அஹ்லிஹி, வ ஸவ்ஜன் ஹைரன் மின் ஸவ்ஜிஹி, வ அத்ஹில்ஹுல் ஜன்னத்த, வ அயித்ஹு மின் அதாபில் கப்ரி, அவ் மின் அதாபின்னார்.

யா அல்லாஹ் ! இவரை மன்னிப்பாயாக, இவருக்கு அருள் செய்வாயாக ! இவரை சுபிட்சமாக வாழவைப்பாயாக ! இவரை மன்னிப்பாயாக ! இவருக்கான விருந்துபச்சாரத்தை மேண்மைப்படுத்தி வைப்பாயாக ! இவர் புகுந்துள்ள இடத்தை விசாலப்படுத்துவாயாக ! இவரை நீராலும், பனிகட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவி விடுவாயாக ! வெண்மையான ஆடையிலிருந்து அழுக்கை தூய்மை படுத்துவது போன்று, இவரது தவறுகளிலிருந்து இவரை நீ தூய்மைப்படுத்துவாயாக !. இவரது வீட்டை விட மிகச்சிறந்த ஒரு வீட்டை இவருக்கு நீ வழங்குவாயாக ! இவரது துணையைவிட சிறந்து துணையை இவருக்கு வழங்கிடுவாயாக ! இவரை சுவனத்தில் நுழைவிப்பாயாக ! மண்ணறையின் வேதனையில் இருந்து இவரை பாதுகாப்பாயாக ! இவரை நரக நெருப்பிலிருந்தும் காப்பாற்றுவாயாக ! ( முஸ்லிம்)

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم  إِذَا صَلَّى عَلَى جِنَازَةٍ يَقُولُ ‏ “‏ اللَّهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَا وَشَاهِدِنَا وَغَائِبِنَا وَصَغِيرِنَا وَكَبِيرِنَا وَذَكَرِنَا وَأُنْثَانَا اللَّهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيِهِ عَلَى الإِسْلاَمِ وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الإِيمَانِ اللَّهُمَّ لاَ تَحْرِمْنَا أَجْرَهُ وَلاَ تُضِلَّنَا بَعْدَهُ ‏”‏ ‏ ‏- سنن أبي داود – سنن ابن ماجه

அல்லாஹும்மஃபிர் லிஹய்யினா, வ மய்யித்தினா, வ ஸஹீரினா, வ கபீரினா, வ தகரினா, வ உன்ஸானா, வ ஷாஹிதினா, வ காயிபினா,  – அல்லாஹும்ம மன் அஹ்யய்தஹூ மின்னா ஃப-அஹ்யிஹி அலல் ஈமான், வ மன் தவஃப்ஃபைதஹு மின்னா ஃபதவஃப்பஹு அலல் இஸ்லாம், – அல்லாஹும்ம லா தஹ்ரிம்னா அஜ்ரஹு வலா துழில்லனா பஃதஹூ ( அபூதாவூத் – இப்னுமாஜா )

பொருள் : யா அல்லாஹ் ! எங்களில் உயிருடன் இருப்பவர்களுக்கும், இறந்தவர்களுக்கும், எங்களில் சிறியவர்களுக்கும், பெரியவர்களுக்கும், எங்களில் ஆண்களுக்கும், பெண்களுக்கும், எங்களில் இங்கு இருப்போருக்கும், இங்கு இல்லாதோருக்கும், மன்னிப்பு வழங்குவாயாக ! யா அல்லாஹ் ! எங்களில் எவரை நீ உயிர் வாழச் செய்கின்றாயோ, அவரை ஈமானுடன் உயிர் வாழச் செய்வாயாக ! யா அல்லாஹ் ! எங்களில் எவரை மரணிக்கச் செய்வாயோ, அவரை இஸ்லாத்திலே மரணிக்கச் செய்வாயாக ! யா அல்லாஹ்!  இவரது கூலியை எங்களை விட்டும் தடுத்து விடாதே ! இவருக்குப் பின்னால் எங்களை வழிகேட்டிலும் விட்டு விடாதே ( அபூதாவூத் – இப்னு மாஜா )

( ஜனாஸா தொழுகையில், இமாமுக்கு பின்னால் நிற்பவர்கள் (மஃமூம்கள்) இமாமைப்போன்று சப்தமிட்டு தக்பீர் கூறவோ, கைகளை மீண்டும் மீண்டும் தக்பீருக்காக உயர்த்திக் கட்டவோ வேண்டியதில்லை.  ஜனாஸா தொழுகையில் ருகூவோ, ஸஜ்தாவோ, அத்தஹியாத் இருப்போ கிடையாது )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *