அல்லாஹ்வின் பேரருளால் இன்று 23 மார்ச் 2016 புதன்கிழமை மாலை 5 மணிமுதல் 8 மணிவரை, ஜுபைல் ராயல் கமிஸன் கேம்ப்-14 இல் மாற்றுமத சகோதரர்களை நேரில் சந்தித்து இஸ்லாத்தை அறிமுகப்படுத்தும் கேம்ப் டேபிள் தஃவா நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் அதிகமானோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அவர்களுக்கு இஸ்லாத்தின் இறைக்கோட்பாடு, ஏகத்துவம், மறுமை வாழ்க்கை குறித்து சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இறையருளால் தமிழகத்தைச்சார்ந்த இரண்டு சகோதரர்கள் இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.