கேம்ப் தஃவா – ஈஸா அல் காத்திர் பள்ளி

அல்-ஜுபைல். ஈஸா அல் காத்திர் பள்ளியில் கடந்த 30-01-2015  அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு வாராந்திர வகுப்பு நடைப்பெற்றது.

அதில் மௌலவி பக்ருதீன் இம்தாதி ‘ மார்க்க கல்வியின்  அவசியம்’ என்ற தலைப்பில் இன்றைக்கு இஸ்லாமிய அடிப்படை கல்வியைப்பற்றிய அறியாமை இளம் தலைமுறையினரிடத்தில் அதிகரித்து வருகிறது.

தான் ஏற்றிருக்கின்ற இறைவனாகிய அல்லாஹ்-வைப்பற்றியோ,  தான் சார்ந்திருக்கின்ற இஸ்லாத்தைப்பற்றியோ, தனது தலைவராக ஒப்புக்கொண்டிருக்கின்ற முஹம்மத் (ஸல்) நபியைப்பற்றியோ எந்த அடிப்படை ஞானமும் இல்லாதவர்களாக சிறார்கள் உருவாகிவருகிறார்கள்.

இந்த கட்டாயக்கல்வியை சமுதாயத்தில் சிலர் கேவலமாகக் கருதியம் வருகின்றனர். இப்படிப்பட்ட நிலை நீடித்தால் சிறிது காலத்தில் சமுதாயத்தைவிட்டும் அடிப்படைக்கல்வி துடைத்தொறியப்படும் நிலை உருவாகிவிடும் – அல்லாஹ் காப்பாற்ற வேண்டும். இந்த அவலநிலையை சமூகத்தைவிட்டும் அப்புறப்படுத்த வேண்டும் என்ற கவலையை வந்திருந்த மக்களுக்குஏற்படுத்தி பேசினார் அல்ஹம்துலில்லாஹ் !!!

Fisher camp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *