கேம்ப் தஃவா ஜுபைல் ஆர்ஸி-14

அல்-ஜுபைல் ஆர்ஸி-14-ல் கடந்த 19,20-01-2015 ஆகிய இருதினங்கள் கேம்ப் தஃவா நிகழ்சி நடந்தது இதில் முதல் நாள் இஷா தொழுகைக்குப்பின் சகோதரர் ஸப்ராஸ் ரியாளுஸ்ஸாலிஹீனிலிருந்து பாவமன்னிப்பு என்ற தலைப்பிலிருந்து ஒரு சில ஹதீஸ்களை வாசிக்க பின்பு மௌலவி ஃபக்ருதீன் இம்தாதி  அதன் விளக்கவுரை நிகழ்த்தினார் இரண்டாம் நாள் (20-01-2015)இஷா தொழுகைக்குப்பின் மௌலவி ஃபக்ருதீன் இம்தாதி “சுபுஹு தொழுகையின் சிறப்புகள்” என்ற தலைப்பில்

” مَنْ صَلَّى الصُّبْحَ فَهُوَ فِي ذِمَّةِ اللَّهِ , فَانْظُرْ يَا ابْنَ آدَمَ لا يَطْلُبَنَّكَ اللَّهُ بِشَيْءٍ مِنْ ذِمَّتِهِ “ .

“சுபுஹு தொழுகையை ஒருவர் தொழுதால்.அவர் அல்லாஹ்வின் பொறுப்பில்உள்ளார்.ஆதமின் மகனே கவனம் கொள்வாயாக! அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளவருக்கு ஏதேனும் (நீர் இடடையூறு) செய்து அதனால் அல்லாஹ் உம்மை தண்டித்து விடவேண்டாம்”என்று நபி(ஸல்) அவர்கள் எச்சரித்த செய்தியை சுட்டிக்ககாட்டியதோடு

 عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِي أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ صَلَّى الْبَرْدَيْنِ دَخَلَ الْجَنَّةَ 

  “இரண்டு குளிர்ந்த (நேரத்) தொழுகைகளையை ஒருவர் தொழுதால் அவர் சுவர்க்கத்தில் நுழைவார்” (சுபுஹு.அஸர்) என்று நபி(ஸல்)சொன்ன செய்தியை சுட்டிக்காட்டி சுபுஹு தொழகையை இஸ்லாமிய சமூகம் தவற விடாமல் தொழுவதற்கு ஆரவமூட்டி பேசினார்.  இந்நிகழ்சியில் இந்தியா இலங்கையை சார்ந்த சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்துக்கொண்டனர் அல்ஹம்லில்லாஹ்!

19-01-2015 அன்று 19-01-2015 IMG_20150120_194434 (1)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *