[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவது தொடர்பான சட்டம் என்ன ?

நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் சூரத்துல் ஃபாத்திஹா ஓதி, ஆமீன் கூறி முடித்த பின்பு திருக்குரானின் நீண்ட அல்லது ஒரு சிறு அத்தியாயத்தை ஓதுவார்கள். ஓதி முடித்த பின்பு மூச்சு விடும் அளவிற்கு அமைதியாக இருந்துவிட்டு தொழுகையின் ஆரம்ப தக்பீருக்கு கைகளை உயர்த்தியது போன்று இரு கைகளையும் உயர்த்தி “அல்லாஹு அக்பர் ” என்று (தக்பீர்) கூறி ருகூஃஉ செய்வார்கள் [ அறிவிப்பவர் : இப்னு உமர் (ரழி) – நூல் : புஹாரி, முஸ்லிம் ]

மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழுகையில் ஆரம்பத்) தக்பீர் சொல்லும்போதும், ருகூஉ செய்யும்போதும் தம்மிரு கைகளையும் தம் காதுகளுக்கு நேராக உயர்த்துவார்கள். ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தும்போது ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்கிறான்) என்று கூறும்போதும் அதைப் போன்றே கைகளை உயர்த்துவார்கள்.

ருகூஃஉக்குப் போகும் முன்பும், ருகூஃஉவிலிருந்து நிமிர்ந்து நிலைக்கு வரும்பொழுதும் கைகளை உயர்த்துவது நபி (ஸல்) அவர்கள் தொடர்ந்து செய்து வந்த சுன்னத்தாகும்.

இதுவே மூன்று இமாம்கள் மற்றும் அதிகமான முஹத்திதீன்களீன் (ஹதீஸ் கலை வல்லுனர்கள்), ஃபுகஹாக்கள் (சட்ட நூல் விற்பன்னர்கள்) ஆகியோரின் வழியுமாகும். ஹனஃபி மத்ஹபிலிருக்கும் சிலரும் இதையே தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்களில் ஒருவர் இஸ்லாம் பின் யூசுஃப் அபூ இஸாமா அல் பல்கீ ஆவார். இவர் அபூ யூசுஃப் (ரஹ்) அவர்களது மாணவராவார்.

அல்லாஹ் மிகவும் அறிந்தவன்… அல்ஹம்துலில்லாஹ்.

அஷ்ஷைஹ் முஹம்மது இக்பால் மதனீ, தமிழகம், இந்தியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *