[கேள்வி-10/200]: தூய எண்ணம் என்றால் என்ன?

அடியானின் உள்ரங்கமான மற்றும் வெளிப்படையான​ சொற்கள் செயல்கள்  அனைத்தும் அல்லாஹ்வை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.

அல்லாஹ் கூறுகின்றான்;

وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّـهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاءَ وَيُقِيمُوا الصَّلَاةَ وَيُؤْتُوا الزَّكَاةَ ۚ وَذَٰلِكَ دِينُ الْقَيِّمَةِ

﴿ سورة البينة ٥ ﴾

இன்னும், அல்லாஹ்வை-அவனுக்காகவே வணக்கத்தைக் கலப்பற்றதாக ஆக்கியவர்களாக (அனைத்து தீய வழிகளை விட்டும் நீங்கி இஸ்லாத்தின்பால்) சாய்ந்தவர்களாக அவர்கள் அல்லாஹ்​வை வணங்குவதற்காகவே அன்றி​ கட்டளையிடப்படவில்லை…​ (அல்பய்யினா 5)

وَمَا لِأَحَدٍ عِندَهُ مِن نِّعْمَةٍ تُجْزَىٰ ﴿١٩﴾ إِلَّا ابْتِغَاءَ وَجْهِ رَبِّهِ الْأَعْلَىٰ

﴿ سورة الليل٢٠﴾

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; (மனிதர்களில்) எவருக்கும் (தன் தர்மத்தின் மூலம் பிரதிபலனைக் கருதிக்) கொடுக்கப்படும் எந்த உபகாரமும் தம்மிடம் இல்லை. மிக்க மேலான தம் இரட்சகனின் முகத்தைத் தேடி​யே தவிர (வேறு எந்த நோக்கத்துடனும் அவர் செலவு செய்யவில்லை. (அல்லைய்ல் 19,20)

ِإِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللَّـهِ لَا نُرِيدُ مِنكُمْ جَزَاءً وَلَا شُكُورًا

﴿ سورة الانسان ٩﴾

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; (உணவை உண்போரிடம்) உங்களுக்கு நாம் உணவளிப்பதெல்லாம், அல்லாஹ்வின் முகத்தை நாடியேதான், உங்களிடமிருந்து நாம் யாதொரு பிரதிபலனையோ அல்லது (நீங்கள் நமக்கு) நன்றி செலுத்துவதையோ நாங்கள் நாடவில்லை). (இன்ஸான் 9)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *