அனைத்து தீய வழிகளை விட்டும் நீங்கி இஸ்லாத்தின்பால் சாய்ந்த நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய மார்க்கமாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
إِنَّ الدِّينَ عِندَ اللَّـهِ الْإِسْلَامُ ۗ ……
﴿ سورة آل عمران ١٩ ﴾
நிச்சியமாக அல்லாஹ் விடத்தில் (அங்கீகரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாம் ஆகும்… (ஆலு இம்ரான் 20.)
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;
أَفَغَيْرَ دِينِ اللَّـهِ يَبْغُونَ وَلَهُ أَسْلَمَ مَن فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ طَوْعًا وَكَرْهًا وَإِلَيْهِ يُرْجَعُونَ
﴿ سورة آل عمران ٨٣ ﴾
அல்லாஹ்வுடைய மார்கமல்லாத (வேறு மார்க்கத்)தையா அவர்கள் தேடுகின்றார்கள். வானங்கள் மற்றும் பூமியில் உள்ளவை, (அவை) விரும்பினாலும், வெறுத்தாலும் அவனுக்கே முழுமையாகக் கீழ்ப்படிந்து (தங்களை ஒப்படைத்து விட்டன) மேலும் அவனளவிலேயே திரும்பக்கொண்டு வரப்படுவார்கள் (ஆலு இம்ரான் 83)
பார்க்க மேலும் அல்பகரா 130, ஆலு இம்ரான் 85, அஷ்ஷூரா 21.