ஜிப்ரீல் (அலை) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடத்தில் (இஸ்லாம்) மார்க்கத்தைப் பற்றி வினவிய நபிமொழியில் வந்துள்ள. ”இஸ்லாம் என்றால் வணக்கத்துக்குரிய இறைவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை, முஹம்மத் (நபி) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார் எனச்சாட்சி கூறுவதும், தொழுகையை நீ உறிய நேரத்தில் தொழுவதும், ஜகாத்தை கொடுப்பதும், ரமழான் மாத்ததில் நோன்பு நோற்பதும், வசதியிருந்தால் ஹஜ் செய்வதுமாகும்” என்ற நபியவர்களின் கூற்றும், மேலும் “இஸ்லாம் (மார்க்கம்) ஐந்து (தூண்கள்) மீது கட்டியெழுப்பப்பட்டுள்ளது” என்ற கூற்றுமாகும். இந்த நபிமொழியிலும் அவைகளையே கூறிய நபியவர்கள் இதில் ஹஜ்ஜை நோன்பைவிட முற்படுத்திக் கூறினார்கள், அவ்விரண்டு (நபி மொழிகளு)ம் இரண்டு ஸஹீஹான கிரந்தங்களிலும் (பதிவாகி) உள்ளன.