[கேள்வி-17/200]: “அல்லாஹ்வைத்தவிர (வணக்கத்துக்குரிய) இறைவன் வேறு யாருமில்லை” என்ற சாட்சியத்தின் ஆதாரம் யாது?

அல்லாஹ் கூறுகின்றான்;

شَهِدَ اللَّـهُ أَنَّهُ لَا إِلَـٰهَ إِلَّا هُوَ وَالْمَلَائِكَةُ وَأُولُو الْعِلْمِ قَائِمًا بِالْقِسْطِ ۚ لَا إِلَـٰهَ إِلَّا هُوَ الْعَزِيزُ الْحَكِيمُ ﴿ آل عمران ١٨ ﴾

“தன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை” என்று அல்லாஹ் உறுதி கூறுகிறான். வானவர்களும், நீதியை நிலை நாட்டும் அறிவுடையோரும் (உறுதி கூறுகின்றனர்) அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. (அவன்) மிகைத்தவன்; ஞானமிக்கவன் ( ஆலு இம்ரான் 18 )

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;

فَاعْلَمْ أَنَّهُ لَا إِلَـٰهَ إِلَّا اللَّـهُ …. ﴿ محمد ١٩﴾

அல்லாஹ்வைத்தவிர வணக்கத்திற்குரியவன் வேறுயாருமில்லை’ என்பதை அறிந்து கொள்வீராக! ( முஹம்மத் 19 )

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;

قُلْ إِنَّمَا أَنَا مُنذِرٌ ۖ وَمَا مِنْ إِلَـٰهٍ إِلَّا اللَّـهُ الْوَاحِدُ الْقَهَّارُ ﴿ ص ٦٥ ﴾

ஒரே அல்லாஹ்வைத்தவிர வணக்கத்திற்குரியவன் வேறுயாருமில்லை’ என்று (முஹம்மதே!) கூறுவீராக!) ( ஸாத் 65 )

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;

مَا اتَّخَذَ اللَّـهُ مِن وَلَدٍ وَمَا كَانَ مَعَهُ مِنْ إِلَـٰهٍ ۚ إِذًا لَّذَهَبَ كُلُّ إِلَـٰهٍ بِمَا خَلَقَ وَلَعَلَا بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍ ۚ سُبْحَانَ اللَّـهِ عَمَّا يَصِفُونَ ﴿المؤمنون ٩١﴾

அல்லாஹ் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அவனுடன் எந்தக்கடவுளும் இல்லை. அவ்வாறிருந்தால் தான் படைத்தவற்றுடன் ஒவ்வொரு கடவுளும் (தனியாகப்) போயிருப்பார்கள். ஒருவரையொருவர் மிகைத்திருப்பார்கள். அவர்கள் கூறுவதைவிட்டும் அல்லாஹ் தூயவன் ( அல்முஃமினூன் 91 )

قُل لَّوْ كَانَ مَعَهُ آلِهَةٌ كَمَا يَقُولُونَ إِذًا لَّابْتَغَوْا إِلَىٰ ذِي الْعَرْشِ سَبِيلًا ﴿ الإسراء ٤٢﴾

‘அவர்கள் கூறுவதுபோல் அவனுடன் பலகடவுள்கள் இருந்திருந்தால் அவர்களும் அர்ஷுடைய (இறை)வனிடம் (சரணடைய) ஒரு வழியைத் தேடியிருப்பார்கள்’ என்று கூறுவீராக ( அல் இஸ்ரா 42 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *