[கேள்வி-18/200]: “அல்லாஹ்வைத்தவிர (வணக்கத்துக்குரிய) இறைவன் வேறுயாருமில்லை” என்ற சாட்சியத்தின் கருத்து யாது ?

அல்லாஹ் அல்லாத‌ ஏனைய படைப்பினங்களுக்கு வணக்கம் செலுத்துவதை மறுத்தலும், எவ்வகையிலும் இணை கற்பிக்க இயலாத அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே வணக்கமும்-வழிப்படுதலும் உரித்தானது என ஏற்றுக்கொள்ளுதலுமாகும்

அல்லாஹ் கூறுகின்றான்;

ذَٰلِكَ بِأَنَّ اللَّـهَ هُوَ الْحَقُّ وَأَنَّ مَا يَدْعُونَ مِن دُونِهِ هُوَ الْبَاطِلُ وَأَنَّ اللَّـهَ هُوَ الْعَلِيُّ الْكَبِيرُ ﴿ الحج ٦٢﴾

இது (ஏனெனில்); நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மை (இறைவன்) மற்றும் அவனையன்றி (வேறு) எதை அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ – அது பொய்யாகும்; இன்னும்; நிச்சயமாக அல்லாஹ் – அவனே உயர்ந்தவன், மிகவும் பெரியவன். ( அல்ஹஜ் 62 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *