அல்லாஹ் கூறுகின்றான்:
إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ آمَنُوا بِاللَّـهِ وَرَسُولِهِ ثُمَّ لَمْ يَرْتَابُوا وَجَاهَدُوا بِأَمْوَالِهِمْ وَأَنفُسِهِمْ فِي سَبِيلِ اللَّـهِ ۚ أُولَـٰئِكَ هُمُ الصَّادِقُونَ
﴿ سورة الحجرات ١٥ ﴾
அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நம்பி பின்னர் சந்தேகம் கொள்ளாது, தமது பொருட்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்வோரே நம்பிக்கை கொண்டவர்கள். அவர்களே உண்மையாளர்கள். (அல்ஹுஜ்ராத் 15).
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்;
“அல்லாஹ்வைத்தவிர (வணக்கத்துக்குரிய) இறைவன் வேறு யாருமில்லை” என்றும் மேலும் நான் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி கூறுகின்றேன். அவ்விரண்டு (சாட்சியங்கள்) உடனும், எவ்வித சந்தேகமும் கொள்ளாது, ஒரு அடியான் (மரணித்து) அல்லாஹ்வை சந்தித்தால் கட்டாயமாக அவன் சுவர்க்கம் நுழைந்து விடுவான். (நூல் : முஸ்லிம்)
மேலும் நபி (ஸல்) அவர்கள் அபுஹுரைரா (ரழி) அவர்களிடம் கூறினார்கள்;
இந்த தோட்டத்துக்கு அப்பால் “அல்லாஹ்வைத் தவிர (வணக்கத்துக்குரிய) இறைவன் வேறு யாருமில்லை என்று மனஉறுதியுடன் சாட்சி கூறுபவரைக் கண்டால் அவருக்கு சுவனத்தைக் கொண்டு சுபசோபனம் சொல்வீராக. (நூல் : முஸ்லிம்)