[கேள்வி-2/200]: அல்லாஹ் படைப்பினங்களை எதற்காகப் படைத்தான்?

அல்லாஹ் தனது திருமறையில் இது சம்பந்தமாக பின்வருமாறு கூறுகின்றான்:

وَمَا خَلَقْنَا السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا لَاعِبِينَ ﴿٣٨﴾ مَا خَلَقْنَاهُمَا إِلَّا بِالْحَقِّ وَلَـٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ -٣٩

1- (வானங்களையும், பூமியையும், அவ்விரண்டுக்கு மத்தியிலுள்ள வைகளையும் விளையாடுவோராய் நாம் படைக்கவில்லை, (நிச்சியமாக) அவ்விரண்டையும் உண்மையைக் கொண்டே தவிர – நாம் படைக்கவில்லை, எனினும் அவர்களில் பெரும்பாலானோர் (இதனை) அறிய மாட்டார்கள்.) அத்துகான் 38,39


وَمَا خَلَقْنَا السَّمَاءَ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا بَاطِلًا ۚ ذَٰلِكَ ظَنُّ الَّذِينَ كَفَرُوا ۚ فَوَيْلٌ لِّلَّذِينَ كَفَرُوا مِنَ النَّارِ -٢٧

2- (வானத்தையும், பூமியையும், இவை இரண்டுக்கு மத்தியலுள்ளவற்றையும் வீணாக நாம் படைக்கவில்லை, இது நிராகரித்தவர் களின் எண்ணமேயாகும், ஆகவே நிராகரித்த வர்களுக்கு (நரக) நெருப்பின் கேடுதான் (உண்டு) ஸாத் 27


وَخَلَقَ اللَّـهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ بِالْحَقِّ وَلِتُجْزَىٰ كُلُّ نَفْسٍ بِمَا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ -٢٢

3- (வானங்களையும், பூமியையும், அல்லாஹ் நீதியைக் கொண்டு (தக்க காரணத்திற்காவே) படைத்திருக்கின்றான், இன்னும் ஒவ்வொரு ஆத்மாவும் அது சம்பாதித்ததைக் கொண்டு கூலி கொடுக்கப்படுவதற்காகவும் (படைத்துள்ளான்) அவர்கள் அனியாயம் செய்யப்படவுமாட்டார்கள். அல்ஜாஸியா 22


وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ -٥٦

4- மேலும் ஜின்களையும், மனிதர்களையும் என்னை அவர்கள் வணங்குவற்காகவே தவிர நான் படைக்க வில்லை. அத்தாரியாத் 56.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *