அல்லாஹ் கூறுகின்றான்;
أَلَا لِلَّـهِ الدِّينُ الْخَالِصُ ۚ ﴿ سورة الزمر-٣﴾
அறிந்துகொள்வீராக! களங்கமற்ற மார்க்க (வழிபாடு யாவு)ம் அல்லாஹ்வுக்கே உரியது (அஸ்ஸுமர் – 3)
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;
إِنَّا أَنزَلْنَا إِلَيْكَ الْكِتَابَ بِالْحَقِّ فَاعْبُدِ اللَّـهَ مُخْلِصًا لَّهُ الدِّينَ ﴿ سورة الزمر-٢﴾
நபியே ! நிச்சயமாக நாம் உமக்கு உண்மையைக் கொண்டு இவ்வேதத்தை இறக்கியருளினோம், ஆகவே, மார்க்கத்திற்கு (அந்தரங்க சுத்தி) உளத்தூய்மைய உடையவராக நீர் அல்லாஹ்வை வணங்குவீராக. (அஸ்ஸுமர் – 2)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது மன்றாட்டத்தினால் (மறுமையில்) அதிக சந்தோசம் அடையும் மனிதர் யாரெனில் உளத் தூய்மையுடன் “அல்லாஹ்வைத்தவிர (வணக்கத்துக்குரிய) இறைவன் வேறு யாருமில்லை” என்று கூறியவராகும். (நூல் புகாரி)
மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ்வின் முகத்தையே நாடி “அல்லாஹ்வைத்தவிர (வணக்கத்துக்குரிய) இறைவன் வேறு யாருமில்லை” என்று கூறியவருக்கு அல்லாஹ் நரகத்தை தடைசெய்து விட்டான் (நூல் புகாரி)