நிச்சியமாக முஹம்மத் (ஸல்) அவர்கள் மனிதர்கள் ஜின்கள் அடங்களாக அனைவருக்கும் அனுப்பபட்ட அல்லாஹ்வின் தூதரும் அடியாருமாவார் என நாவினால் கூறியதற்கு அமைவாக அடிமனதினால் உறுதியாக உண்மைப்படுத்துவதாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்;
يَا أَيُّهَا النَّبِيُّ إِنَّا أَرْسَلْنَاكَ شَاهِدًا وَمُبَشِّرًا وَنَذِيرًا
(45) وَدَاعِيًا إِلَى اللَّـهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُّنِيرًا
நபியே! நாம் நிச்சயமாக உம்மைச் சாட்சியாகவும்; நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே அனுப்பியுள்ளோம். (45) இன்னும் அல்லாஹ்வின்பால் (மனிதர்களை) – அவன் அனுமதிப்படி – அழைப்பவராகவும்; பிரகாசிக்கும் விளக்காகவும் (உம்மை அனுப்பியுள்ளோம்.) ( அல் அஹ்ஸாப் 45-46)
எனவே நபியவர்கள் நமக்கு அறியத்தந்த கடந்தகால மற்றும் எதிர்கால செய்திகள், அனுமதித்தவைகள் தடைசெய்தவைகள், அனைத்தையும் உண்மைப் படுத்துவதும், மேலும் கட்டளையிட்டவைகளை ஏற்று வழிப்படுவதும், விளக்கியவைகளை தவிர்ந்து கொள்வதும், மார்க்கத்தைப் பின்பற்றுவதும், தீர்ப்பு வழங்கியவைகளைத் திருப்தி கொள்வதுடன் அவைகளை ஏற்று அவருடைய வழி முறைகளை இரகசியத்திலும் பரகசியத்திலும் பின்பற்றுவதும் ஒரு முஸ்லிமின் கடமையாகும்,
மேலும் அல்லாஹ்வின் தூதை அவரே எத்தி வைத்தார் என்ற அடிப்படையில் அவருக்கு வழிப்படுவதும் மாறுசெய்வதும் அல்லாஹ்வுக்கு வழிப்படுவதற்கும் மாறுசெய்வதற்கும் சமனாகும், அவரைக் கொண்டு தெளிவான செய்தியை எத்திவைத்து அவரது சமூகத்தையும் தெளிவான ஆதாரத்தில் நிறுத்தி மார்க்கத்தை பரிபூரணப்படுத்தும்வரை அவரது உயிரை அல்லாஹ் கைப்பற்றவில்லை.
இதுவே சாட்சியத்தின் முழுக் கருத்தாகும்