[கேள்வி-5/200]: ஒரு செயல் எப்போது (இபாதத்) வணக்கமாக மாறும்?

அச்செயலில் இரண்டு விசயங்கள் பூரணமாக இருக்க வேண்டும் அவை, நிறைவான கீழ்ப்படிவுடன் கூடிய நிறைவான நேசமாகும்.

وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِّلَّـهِ – البقره 165

அல்லாஹ் கூறுகின்றான். …விசுவாசிகளோ அல்லாஹ்வை நேசிப்பதில் மிகக்கடுமையானவர்கள்… (அல்பகரா 165.)

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;

إِنَّ الَّذِينَ هُم مِّنْ خَشْيَةِ رَبِّهِم مُّشْفِقُونَ – المؤمنون 57

…நிச்சயமாக தங்கள் இரட்சகனின் பயத்தால் அஞ்சி எச்சரிக்கையாக இருக்கின்றார்களே அத்தகையோரும் … (அல்முஃமினூன் 57)

இவ்விரண்டையும் ஒரே வசனத்தில் இணைத்துக் கூறும் போது

إِنَّهُمْ كَانُوا يُسَارِعُونَ فِي الْخَيْرَاتِ وَيَدْعُونَنَا رَغَبًا وَرَهَبًا ۖ وَكَانُوا لَنَا خَاشِعِينَ – الأنبياء 90

…நிச்சயமாக, இவர்கள் யாவரும் நன்மைகளில் (மிகத்துரிதமாக) விரைபவர்களாக இருந்தார்கள், (நம்முடைய அருளை) ஆசித்தும், (நம் தண்டனையைப்) பயந்தும், நம்மை (பிரார்த்தனை செய்து) அழைப்பவர்களாகவும் இருந்தார்கள், அவர்கள் (யாவரும்) நம்மிடம் உள்ளச்சமுடையோர்களாகவும் இருந்தார்கள். (அல்-அன்பியா 90)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *