[கேள்வி-7/200]: அல்லாஹ் திருப்தி கொள்பவற்றை அடியார்கள் எப்படி அறிந்தார்கள்?

அல்லாஹ் தூதர்களை அனுப்பியதன் மூலமும், அவனது விருப்பு வெறுப்புக்களை விளக்கி வேதங்களை இறக்கியதனாலும் அடியார்கள் அதை அறிந்து கொண்டார்கள். இதனால் அவர்களுக்கெதிரான ஆதாரம் நிலைப்பெற்று அல்லாஹ்வின் எல்லையற்ற ஞானமும் தெளிவாகியது.

رُّسُلًا مُّبَشِّرِينَ وَمُنذِرِينَ لِئَلَّا يَكُونَ لِلنَّاسِ عَلَى اللَّـهِ حُجَّةٌ بَعْدَ الرُّسُلِ ۚ وَكَانَ اللَّـهُ عَزِيزًا حَكِيمًا ﴿سورة النساء ١٦٥﴾

அல்லாஹ் கூறுகின்றான் (அல்லாஹ்வின் மீது மனிதர்களுக்கு (சாதகமாக) யாதொரு ஆதாரமும் இல்லாதிருப்பதற்காக, இத்தூதர்களுக்குப் பின்னரும் தூதர்கள் பலரை (சுவர்கத்தைக் கொண்டு) நன்மாராயம் கூறுகின்றவர்களாகவும் (நரகத்தைக்கொண்டு) அச்சமூட்டி எச்சரிக்கின்றவர்களாகவும் (அல்லாஹ் அனுப்பி வைத்தான்.) (அன்னிஸா 165)

قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّـهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّـهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ ۗ وَاللَّـهُ غَفُورٌ رَّحِيمٌ ﴿سورة آل عمران ٣١﴾

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; (நபியே மனிதர்களிடம்) நீர் கூறுவீராக “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால், என்னை நீங்கள் பின்பற்றுங்கள் (அவ்வாறு நீங்கள் செய்தால்) உங்களை அல்லாஹ் நேசிப்பான், உங்கள் பாவங்களையும் உங்களுக்காக அவன் மன்னித்து விடுவான் அல்லாஹ் மிக்க மன்னிப்புடையவன், மிகக்கிருபையுடயவன்”. (ஆலு இம்ரான் 31)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *