கோபத்தின் விபரீதம் (வீடியோ)

கோபம் ஒரு விபரீத குணம். ஒருவர் தன்னைப்பற்றி பிறருக்கு தெரிந்துவிடக் கூடாது என எதை தனக்குள்ளே மறைத்து வாழ்கிறாரோ, அத்தகைய குணத்தை பிறர் மத்தியில் அவராகவே பகிரங்கமாக அறிவிக்கச் செய்வதுதான் கோபத்தின் கொடூரம். உதாரணமாக, ஒருவர் தனக்கு இரண்டு முகங்கள் இருக்கிறது என்றோ, தான் மிக மோசமானவன் என்றோ பிறர் பேசுவதை ஒருபோதும் விரும்ப மாட்டார். ஆனால் கோபம் வந்துவிட்டால் தன்னையும் அறியாமல் ” நீ இதுவரை எனது ஒரு முகத்தைத்தான் பார்த்திருக்கிறாய் !!! , எனக்கு இன்னொரு முகம் இருக்கிறது !!! நான் மோசம் செய்யவேண்டும் என தீர்மானித்து விட்டால், என்னை யாராலும் கட்டுப்படுத்த முடியாது !! என்று கோபத்தால் தனக்கு எதிராகவே நாக்கூச்சமின்றி தன்னைத்தானே பகிரங்கமாக விமர்சனம் செய்துகொள்வார். இப்படிப்பட்ட இழிவான கோபத்திற்கு அடிமையாகாமல், நமது நன்மைகளை பாழாக்கிவிடாமல் காத்துக்கொள்வதற்கு வழி என்ன தெரியுமா…… (தொடர்க….)

ஜும்ஆ குத்பா பேருரை
வழங்கியவர்: அஷ்ஷைஹ் முஜாஹித் இப்னு ரஸீன், இஸ்லாமிய அழைப்பாளர், ராகா தஃவா நிலையம், தம்மாம், சவுதி அரேபியா
நாள் : 18-10-2013 வெள்ளிக்கிழமை
இடம் : ஜுபைல் போர்ட் கேம்ப்

[youtube id=Sv4r71froKs]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *