சகோதரத்துவ சங்கமம் – 09 ஏப்ரல் 2016

10APR16

அல்லாஹ்வின் மாபெரும் அருளால் 9-4-2016 (சனிக்கிழமை) மாலை 6:00 மணி முதல் இரவு 9:30 வரை இஸ்லாத்தை தங்களின் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட புதிய முஸ்லீம் சகோதரர்களின் அனுபவ பகிர்வு நிகழ்ச்சி சகோதரத்துவ சங்கமம் கெம்யா பீச் கேம்ப்பில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை அல்-ஜுபைல் தஃவா நிலைய மாற்றுமத அழைப்பு பிரிவின் பொறுப்பாளர் மவ்லவி பக்ரூத்தீன் இம்தாதி அவர்கள் தலைமை தாங்கி சகோதரத்துவ சங்கமம் எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்கள், அதனை தொடர்ந்து சகோ. முபாரக் அலி கான் அவர்கள் வரவேற்புரையும், சிறுவர் மஹதி இப்னு முபாரக் மற்றும் ரிஸால் இப்னு நூருல் ஹஸன்  குர்ஆன் அரபு மொழியும், தர்ஜமாவும் சிறப்பாக செய்தனர். இதனைத் தொடர்ந்து மார்க்க கேள்வி-பதில் நிகழ்ச்சி பவர்-பாயிண்ட் வழியாக சகோதரர் நூருல்ஹஸன் அவர்களால் சிறப்பாக நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து எப்படி தாங்கள் இஸ்லாமை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டோம் என்ற அனுபவ பகிர்வு நிகழ்ச்சி தொடங்கியது.

இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொண்டது மிகவும் சுவையாகவும், தஃவா களப்பணியாளர்களுக்கு உந்துதலாகவும் இருந்தது. இந்நிகழ்ச்சியில் மதுரையைச் சார்ந்த விக்னேஷ் என்ற சகோதரர் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்! “

இதனைத்தொடர்ந்து  ராக்கா தஃவா நிலைய அழைப்பாளர் மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன் அவர்கள் மிக அழகானதொரு தொகுப்புரையை வழங்கினார் அது புதிய சகோதர்களுக்கும், களப்பணியில் இருக்க கூடிய சகோதரர்களுக்கும் பயனுள்ளதாக இருந்தது. 

இந்நிகழ்ச்சிக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் ஏக இறைவனாகிய அல்லாஹ் நற்கூலியை வழங்குவானாக!

01 10APR16 02 10APR16

வீடியோ தொகுப்பு விரைவில்… இன்ஷா அல்லாஹ்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *