சுவனத்தை நோக்கி….. (வீடியோ)

ஒருமுறை அனஸ் (ரழி) அவர்கள் அண்ணலாரிடம், “அல்லாஹ்வின் தூதரே! நான் சொர்க்கம் செல்வதற்கு மறுமையில் தாங்கள் எனக்கு அல்லாஹ்விடம் ஷஃபாஅத் (சிபாரிசு) செய்யவேண்டும்” என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் “நிச்சயமாக நான் உமக்கு அல்லாஹ்விடம் சிபாரிசு செய்வேன்” என்று சொன்னார்கள். உடனே அனஸ் (ரழி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாளில் நான் தங்களை எந்த இடத்தில் சந்திப்பது? என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், ” மறுமையில் ‘ஸிராத்’ எனும் பாலத்திற்கு அருகில் நீர் எம்மை சந்திக்கலாம்” என்று சொன்னார்கள். அதற்கு அனஸ் (ரழி) அவர்கள், “அங்கு தங்களை நான் சந்திக்க முடியவில்லை என்றால் நான் எங்கு தங்களை தேடுவேன்” என்று கேட்டார்கள். “நன்மை-தீமைகள் நிறுக்கப்படும் தராசுக்கு அருகில் நீங்கள் என்னை தேடுங்கள்” என்று நபியவர்கள் சொன்னவுடன், அங்கும் தங்களை சந்திக்க முடியவில்லை என்றால், நான் தங்களை எங்கு தேடுவேன்? என அனஸ் (ரழி) அவர்கள் கேட்டார்கள். அப்பொழுது நபியவர்கள் ” அப்படியென்றால் நீர் எம்மை ‘கௌதர்” எனும் தடாகத்திற்கு அருகில் சந்திக்கலாம் என்று சொன்னார்கள்……. (தொடர்க…)
ரமழான் முழு இரவு நிகழ்ச்சி – ஜுபைல் தஃவா நிலையம்
அஷ்ஷைஹ் முஹம்மது மன்சூர் மதனீ , இஸ்லாமிய அழைப்பாளர், தம்மாம்.
நாள்: 25 ஜூலை 2013 வியாழன் இரவு.

 [youtube id=p3NR3crachQ]

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *