சுவர்க்கவாசிகளாக வாழ்வோம் (v )

ஒவ்வொரு முஃமினுக்கும் மறுமை வெற்றியும் அதன்பிறகு கிடைக்கும் சுவனத்து இன்பங்களும்தான் வாழ்வின் குறிக்கோளாக இருக்கிறது. இவ்வுலகத்தில் கண்களால் யாரும் கண்டிராத, உணர்வுகளால் உணர்ந்திராத, வார்த்தைகளால் விளங்கிவிட முடியாத, முடிவில்லா இன்பம்தான் சுவர்க்கத்து இன்பம்.

அத்தகைய இன்பம் கிடைப்பதுதான் தனது வாழ்வின் லட்சியமாகக் கொண்டு வாழும் முஃமின்களிடம், சில பண்புகள் இருக்கும். அண்ணலாரும் அவர்களிடம் நேரில் பாடம் கற்ற அவரது தோழர்களும், இத்தகைய பண்புகளை தன்னகத்தே நிலைநிறுத்தி வாழ்வில் ஒவ்வொரு நிகழ்விலும் அதை வெளிப்படுத்துவதில் மிகுந்த பேரார்வமும், போட்டி மனப்பான்மையும் உள்ளவர்களாக இருந்தார்கள்.

ஆகவேதான் அவர்களை ஏக இறைவன் முழுமையாக பொருந்திக்கொண்டான். அவர்களும் ஏக இறைவனாகிய அல்லாஹ்வை முழுமையாக பொருந்திக் கொண்டார்கள்.

அத்தகைய நல்லோர்களிடம் மிகைத்திருந்த நற்பண்புகள் நம்மிடமும் இருக்குமானால், அதை நாமும் நமது வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் வெளிப்படுத்துவோமானால் நமது வாழ்க்கையும் சுவர்க்கவாசிகளில் வாழ்வாக அமையும் இன்ஷா அல்லாஹ்…..

மாதாந்திர பயான் நிகழ்ச்சி
வழங்கியவர்: அப்பாஸ் அலீ MISC
அழைப்பாளர், அல்கோபார் தஃவா நிலையம்.
நாள் :15 ஜனவரி 2016 வெள்ளிக்கிழமை
இடம்: ஜுபைல் தஃவா நிலைய பள்ளி வளாகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *