[கட்டுரை]: சூஃபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக் ஜமாஅத் – 6

(தொடர்-6)

4. மஃரிபத் (மெஞ்ஞானம் )  المعرفة

ஸூஃபிகளின் கூற்றுப்படி தேவையற்ற சரீஅத் சட்டங்களால் தன்னைத்தானே விலங்கிட்டுக் கொண்ட ஒரு மனிதன் ஒரு ஸூஃபிக் குருவின் சீடனாகி தரீக்கத் எனும் சேற்றினுள் விழுந்து மூளையையும் சுய சிந்தனையையும் பறிகொடுத்து பின்னர் ஹக்கீக்கத் எனும் மாயையில் வீழ்ந்து புலம்ப ஆரம்பித்ததும் அளவுக்கதிகம் இறை நினைவில் ?? ( ஸூஃபிகளின் இறைவனான ஷைத்தானின் நினைவில் மூழ்கியதால் ) ‘பனாஃ ‘ எனும் நிலை ஏற்படுமாம் . இதற்கு இறை நினைவால் மூழ்கி தன்னையே அழித்துக் கொள்ளல் ( அதாவது தன்னிலை மறந்து விடும் நிலை ) என்று ஸூஃபிகள் வாதிடுகின்றனர்.

உண்மையில் இது போதை மயக்கத்தில் பேதலித்து விடுவதால் , அல்லது ஊன் உறக்கமின்றி சதா காலமும் ஏதோ ஒன்றை நினைத்துக் குழம்பிக் கொண்டிருப்பதால் ஏற்படும் ஒரு வகை மூளைக் குழப்பம் அல்லது பைத்தியத்தின் ஆரம்ப நிலை என்பதில் சந்தேகமில்லை.

அனைவரையும் விட அல்லாஹ்வுக்கு விருப்பமான , அவனுக்கு அதிகம் அஞ்சி நடந்த , இபாதத் , வணக்கம் உட்பட அனைத்து விடயங்களிலும் முன்மாதிரியாக அனுப்பப்பட்ட முஹம்மத் நபியவர்களுக்கே இவ்வாறான ஒரு நிலை ஏற்படவில்லையே .. இப்படியொரு பனாஃ நிலைக்குக் சென்று இவர்களைப் போல் உளறவில்லையே … நபியவர்களை விட இந்த ஸூஃபிகள் இறை நேசர்களா ? அவர்களை விடக் கடுமையான வணக்கசாளிகளா ? அவர்களுக்குத் தெரியாத ஹக்கீக்கத்தை ( ரகசியத்தை ) இவர்கள் தெரிந்து கொண்டார்களா ?

நபியவர்களின் ஆத்மீகப் பாசறையில் பயிற்சி பெற்ற லட்சக் கணக்கான ஸஹாபாக்களில் ஒருவருக்கேனும் இப்படியொரு நிலை ஏற்பட்டுப் புலம்பியதாக வரலாறு உண்டா ? அப்படி இந்த ஸூஃபிகள் நிரூபிப்பார்களா? அல்லாஹ் பொருந்திக் கொண்டதாக அல்குர்ஆனிலேயே விளம்பரப்படுத்தப்பட்ட அந்த இறைநேசர்களுக்குக் கற்பிக்காத ரகசியத்தை இந்த ஸூஃபிகளுக்கு கற்றுக் கொடுத்தானா? இந்த வினாக்களுக்கு ஒவ்வொரு தனி மனிதனும் விடையளிக்கக் கடமைப்பட்டுள்ளான் .

சரி…. விடயத்துக்கு வருவோம் ..

இப்போது இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே அல்லாஹ்வின் பிரதிபலிப்பே. தூணும் அவனே துரும்பும் அவனே, வானமும் அவனே வையமும் அவனே நீயும் அவனே நானும் அவனே எனும் ரகசியம் அவருக்குப் புலப்பட ஆரம்பித்ததும் அவருக்கு அனைத்து வித மறைவான ஞானங்களும் புலப்பட ஆரம்பிக்கும். இவரே முன் கூட்டியே கடவுளாக இருந்திருந்ததன் ரகசியத்தை இப்போது கண்டு கொண்டதால் கடவுளின் ஆற்றல், அறிவு வல்லமை மறைவான ஞானம் அனைத்தும் இவருக்கும் வந்து விடும் . இதற்குத்தான் இவர்களிடத்தில் மஃரிபா மெஞ்ஞான முக்தி பெறல் எனப்படும் . இந்த நிலையை அடைந்தவர்களுக்கு ஆரிபீன்கள் மெஞ்ஞானவான்கள் எனும் பெயர் சூட்டப்படும் .

அப்துல் அஸீஸ் தப்பாக் எனும் அண்மைக்கால ஸூஃபி ஒருவர் கூறுகின்றார் ..
‘அல்லாஹூத்தஆலா–தான் யாரென்ற மஃரிபா ஞானத்தை ஒருவருக்குக் கொடுக்கும் வரை எவரையும் நேசிப்பதில்லை. அந்த ஞானம் பெற்றதும் அவர் அல்லாஹ்வின் ரகசியங்களையெல்லாம் காண ஆரம்பிப்பார். அப்போது அவருக்கு ஜத்பு எனும் இறை ஈர்ப்பு நிலை ஏற்படும். ( இப்ரீஸ் ப: 217 )

இல்லை! உண்மையில் இது தேவையற்ற சிந்தனைக் குழப்பத்தாலும், அளவுக்கதிகமான திக்ர் எனும் பெயரில் அரங்கேற்றிய பேயாட்டத்தாலும் ஏற்பட்ட காக்காய்வலிப்பு நோய்தான் இது! .

அதாஉல்லாஹ் இஸ்க்கந்தரி எனும் ஸூஃபி மகான்?? கூறுகின்றார்…

‘மஃரிபா –ஞானமென்பது ஒரு கற்கக் கூடிய அறிவல்ல .அது நேரடியாகக் காணும் ஒரு நிகழ்வாகும், அது சொல்லித் தெரியும் ஒன்றல்ல, அது வர்ணிக்க முடியா ஒரு ரசனைமிகுஓவியம், திரையிடப்படாத ஒரு காட்சி. இதைக் கண்ணுற்றவர்கள் ஏனையோரைப் போன்றல்ல, ஏனையோர் கண்ணுற்றோரைப் போன்றுமல்லர். மஃரிபா எனும் ஞானம் பெற்ற ஆரிபீன்களிடத்தில் அல்லாஹ் அல்லாத எப்பொருளும் இருக்கின்றதென்றோ இல்லையென்றோ சொல்லப்பட மாட்டாது. ஏனெனில் அவனே எல்லாம் என்பதே உண்மையாதலால் அவனல்லாத எதுவும் இல்லையென்பது தெளிவாகின்றது, (கஸ்புல் அஸ்ரார் . ப: 139)

எதுவுமறியா அப்பாவிப் பாமர சமூகம் ஸூஃபி மகான்கள், மெஞ்ஞான குருநாதர்கள் என்று போற்றிப் புகழ்ந்து கொண்டிருக்கும் இந்த ஷைத்தானின் தூதர்களான கேடுகெட்ட இந்த ஸூஃபிகளின் அந்தரங்கம் இதுதான். குப்ரையும் ஷிர்க்கையும் பாமரர்கள் மத்தியில் பெயரை மாற்றி மெஞ்ஞானம் எனும் போர்வையில் விதைத்து நரகத்தின் நாயகனான ஷைத்தானின் அணிக்கு ஆட்சேர்ப்பு செய்து ஷைத்தானின் நேசர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டம் போட்டு பசுத்தோல்ப்போர்த்திய புலிகள் போன்று சமுகத்திலே ஊடுருவிய, இப்போதும் ஊடுருவியிருக்கும் இந்தக் கேடு கெட்டவர்களை அனைவரும் அடையாளங் கண்டு கொள்ள வேண்டும்.

இவர்களைப் பற்றி சமூகத்தின் மத்தியில் உள்ள தவறான கருத்தோட்டத்தைக் களையெடுத்து இவர்களின் சுய ரூபத்தைத் தோலுரித்துக் காட்ட வேண்டும் . இது ஒவ்வொரு முஃமினதும் இஸ்லாமிய, தார்மீகக் கடமையாகும் .

அன்னிய பிற மதங்களில் ஸூஃபித்துவம்.

ஸூஃபி மகான்கள் இஸ்லாத்தில் மேன்மைக்கும் அந்தஸ்த்துக்கும் உரியவர்கள், தம் வாழ்வையே இஸ்லாத்திற்காக அர்ப்பணித்தவர்கள் என்று தவறாகப் புரிந்து வைத்திருப்போருக்கு மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கின்றேன் . இந்த ஸூஃபித்துவத்துக்கும் இஸ்லாத்துக்கும் கடுகளவு கூடச் சம்பந்தம் இல்லை.

இன்னும் சொல்லப் போனால் இந்த ஸூஃபித்துவம் இஸ்லாத்திற்கு முன்னுள்ள காலத்திலேயே பல்வேறு மதங்களிலும் அந்தந்த மதங்களின் பிரதான சித்தாந்தமாக இருந்து வந்துள்ளதையும், இந்த ஸூஃபிகள் அன்றும் இன்றும் கூறும் அதே அத்வைதக் கொள்கையை அந்தந்த மதங்களைச் சேர்ந்த குருக்களும் ஞானிகளும் போதித்து வந்துள்ளனர் என்பதையும் நாம் காண முடிகின்றது.

இன்றும் கூட அந்தந்த மதங்களின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாக இந்த ஸூஃபிகள் சொல்லித் திரியும் அத்வைத மெஞ்ஞானக் கொள்கை ?? அமைந்திருப்தைக் காணலாம் . இதை நான் அனுமானமாகச் சொல்லவில்லை . தகுந்த ஆதாரங்களுடன் இக்கொள்கை அன்னிய வேதங்களில் உள்ளதென்பதை நிரூபிக்க அந்தந்த மதங்களின் வேத நூல்களிலிருந்தே இது பற்றிக் கூறப்படும் பகுதிகளை எடுத்துக் கூறுகின்றேன் . அவற்றைப் படித்து விட்டு – சந்தேகப்பட்டால் அந்ததந்த வேத மூல நூல்களை எடுத்துப் பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்த ஷைத்தானியக் கொள்கைகளையெல்லாம் அழித்தொழிப்பதற்காகவே இஸ்லாம் வந்தது. அழித்தொழித்தது. ஒரேயொரு கடவுள்தான் அல்லாஹ் . அவனல்லாத அனைத்தும் அவனது அடிமைகள். படைப்புக்கள் என்பதை தெளிவாக எடுத்துக் கூறியது. ஸூஃபிகள் சொல்வது போல் இந்த எல்லாம் அவனே என்பதுதான் அல்லாஹ் கூற விரும்பிய ரகசியமெனில் முஹம்மது நபிக்கு இஸ்லாத்தைக் கொடுத்து அதைப் போதிக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் இக்கொள்கைதான் இஸ்லாத்துக்கு முன்பே அனைத்து மதங்களிலும் இருந்துள்ளதே.

எனவே சுருங்கக் கூறின் ஸூஃபிகள் அனைவரினதும் ஒருமித்த அடிப்படைக் கொள்கை ‘ எல்லாம் அவனே ‘ எனும் அத்வைதக் கொள்கையும், கடவுள் குறிப்பிட்ட சிலரில் இறங்கி அவர்கள் கடவுள் அவதாரம் எடுக்கின்றனர் எனும் ஹூலூல் இத்திஹாத் எனும் கொள்கையுமாகும். இது முழுக்க முழுக்க ஷைத்தானியக் கொள்கை. இதற்கும் இஸ்லாத்துக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. ஏனைய பல்வேறு மாற்று மதங்களிலிருந்து காப்பியடிக்கப்பட்ட ஒரு சித்தார்த்தமே இது என்பதை அந்தந்த மதங்களின் மூல நூல்களிலிருந்தே- முடிந்த வரைக்கும் எடுத்துக் காட்ட முயற்சிக்கின்றேன் .

ஸூபித்துவம் … யஹூதிகளிடத்தில்;

ஸூஃபி என்ற மூலச் சொல் எதிலிருந்து பிறந்தது என்பதில் பல கருத்துக்கள் இருக்கின்றன. الصوفசூஃப்-கம்பளி எனும் சொல்லிலிருந்து பிறந்திருக்க வேண்டுமென சிலர் வாதிடுகின்றனர் . இன்னும் சிலர்(الصفاء) ஸபா- தெளிவு எனும் சொல்லிலிருந்து பிறந்திருக்கலாம் எனக் கருதுகின்றனர் . எனினும் இக்கருத்துக்கனை ஏற்றுக் கொள்ள முடியாததற்கு பல நியாயங்கள் இருக்கின்றன . அதுபற்றிய விபரங்களை ஸூஃபித்துவம் பற்றிய ஏனைய நூல்களில் அறிந்து கொள்ளலாம் .

எனினும் இச்சொற்பதம் எங்கிருங்து வந்ததென்பதை நுணுக்கமாக ஆராயும் போது அதிர்ச்சியான சில தகவல்கள் கிடைக்கின்றன . அதாவது இச்சொல் ‘ஸூஃபியா’ ( ஞானம் ) எனும் யூனானிய சொல்லிலிருந்து அன்றேல் ஸூஃபிய் எனும் யஹூதிய சொல்லிலிருந்துதான் வந்திருக்க வேண்டுமென்பது ஆராயும் போது ஐயத்துக்கிடமின்றித் தெளிவாகின்றது.

ஆம் ! யஹூதிய சமூகத்தின் மத்தியில் இருந்த ஒரு சில மதகுருக்களுக்கு ஸூஃபிய் என்று கூறப்பட்டு வந்தது. அஸ்ஷைக் அல் முஸ்லிக் – நேர்வழி காட்டும் குருக்கள் என இவர்கள் அறிமுகமாகியிருந்தனர். இவர்கள் நடத்தும் சில ரகசிய ஆத்மீக மெஞ்ஞான சபைகளுக்கு நபிமார்களும் வருகை தருவார்கள் என இவர்கள் நம்பி வந்தார்கள். இவர்கள் ஒன்று கூடும் இடத்திற்கு (مصفاة ) மிஸ்பா என அழைக்கபட்டது. இஸ்ரவேலர்கள் கன்ஆன் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டதன் பின்னர் இவ்வாறான தேவாலயங்களின் எண்ணிக்கைகள் அதிகரிக்க ஆரம்பித்தன. பின்னர் மதாலயங்களாகவும் ,கல்விக் கூடங்களாகவும் பரிணமிக்க ஆரம்பித்தன.

இந்த ஆத்மீகப் பயிற்சியை வழங்குபவருக்கு நபீம் எனும் பெயரும் இருந்து வந்துள்ளது. அதாவது இவர் ஸூஃபிய் என்பவருக்கு ஒரு படித்தரம் குறைந்தவராவார். இவர்கள் தம்மை நபிமார்கள் எனவும் வாதி;ட்டுள்ளனர். யஹூதிகள் இவர்களை அளவு கடந்து நேசித்து கண்ணியப்படுத்தி வந்துள்ளனர் .உண்மையான நபிமார்களைக் கொலை செய்தும் வந்துள்ளனர் . இந்த மிஸ்பாத் எனும் ஞானக்கூடத்தில் கற்றுத் தேர்ந்தவர்கள் தம்மை நபிமார்கள் எனவும் அறிமுகப்படுத்தினர் .

ஹிஜ்ரி இரண்டாம் மூன்றாம் ஆண்டுகளில்மட்டுமின்றி நபிகளாரின் காலத்திலேயே அரபு நாட்டில் சில பொய் நபியமார்கள் தோன்றினர். இவர்கள் சிலரின் வரலாற்றை எடுத்துப் பார்க்கும் போதும் மிஸ்பாத் எனும் யஹூதிக் கல்லூரியில் பயின்ற யஹூகளாக இவர்கள் இருந்தமை வரலாறு சொல்லும் பாடமாகும் . (பார்க்க : முஹம்மத் பில் கிதாபில் முகத்தஸ் ப 72 ) (அல்கஸ்பு அன் ஹகிக்கதிஸ் ஸூபிய்யா ப 742 )

( தொடரும்… )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *