அல்லாஹ்வின் பேரருளால் 30-11-2015 திங்கட்கிழமை இரவு 7:30 முதல் 10:00 மணி வரை அல்-ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு (NMD) சார்பாக ஜுபைல் தஃவா நிலைய வகுப்பறையில் “குறுகிய நேரத்தில் மாற்று மத அன்பர்களிடம் இஸ்லாமிய செய்திகளை சொல்வதெப்படி? (ONE TO ONE DAWAH) என்கின்ற பயிற்சி முகாம் நடைப்பெற்றது
இதில் “அழைப்பு பணியின் அவசியம் ” என்ற தலைப்பில் அல்-ஜுபைல் தஃவா நிலைய அழைப்பாளர் மெளலவி ஃபக்ருதீன் இம்தாதி துவக்கவுரையாற்ற, மௌலவி பொறியாளர் ஜக்கரியா அவர்கள் காணொளி கட்சி மூலமாக தஃவா உதவியாளர்களுக்கு (ONE TO ONE DAWAH) தஃவா பயிற்சி வழங்கினார். வருகை தந்த அனைவரும் பயனடைந்தனர். இறுதியில் அனைவருக்கும் இரவு உணவு பறிமாறப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ் !!!!