திங்கள்-வெள்ளிக்கிழமைகளில் மரணம் (கேள்வி-பதில்)

கேள்வி: வெள்ளிக்கிழமையில் மரணிப்பதும் திங்கட்கிழமையில் மரணிப்பதும் நல்ல மரணத்தின் அடையாளங்களில் ஒன்றா?

பதில்:   வெள்ளிக்கிழமையில் மரணிப்பதும் திங்கட்கிழமையில் மரணிப்பதும் நல்ல            மரணத்தின் அடையாளங்களில் ஒன்றாக நம்பப்படுகிறது.

வெள்ளிக் கிழமை யார் மரணிக்கின்றாரோ அவர் கப்று வேதனையிலிருந்து பாதுகாக்கப்படுவார்.என்று நபிகளார் கூறியதாக சில அறிவுப்புக்கள் காணப்படுகின்றன.

திர்மிதியிலே 1074 என்ற இலக்கத்திலும் அஹ்மதில் 6582 என்ற இலக்கத்திலும் அப்துல்லாஹ் இப்னு அம்ர் வழியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அறிவிப்பாளர் தொடரில் ரபீஆ இப்னு ஸைப் மனனத்தில் பலஹீனமானவர். இவரை இமாம் புகாரி நஸாஈ போன்றோர் விமரிசித்துள்ளனர்.(தஹ்தீப் 3-256) இதே கருத்தில் இன்னொரு அறிவிப்பு அஹ்மதில் 6646 அப்துல்லாஹ் இப்னு அம்ர் வழியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அறிவிப்பாளர்களில் இடம்பெறும் அபூ குபைல் பலஹீனமானவர் என ஸாஜி மற்றும் இப்னு மஈன் விமரிசித்துள்ளனர் அவரது மாணவரான முஆவியா இப்னு ஸஈத் யாரென்று அறியப்படாதவர்.(பார்க்க: தஹ்தீப் )

திங்கட்கிழமை மரணம் சம்பந்தமாக எந்த ஹதீஸ{ம் இல்லை. “அபூபக்ர் ரலியல்லாஹ் அன்ஹ் அவர்கள் மரணிக்கும் போது நபியவர்கள் எந்த நாள் மரணித்தார்கள்? என்று வினவினர். திங்கட்கிழமை என ஆயிசா ரலியல்லாஹ் அன்ஹா பதிலளித்தனர். அது என்ன நாள்? என்று வினவினார்கள். திங்கட்கிழமை என்று ஆயிசா ரலியல்லாஹ் அன்ஹா பதிலளித்தனர். எனது மரணம் இரவிற்குள் நிகழவேண்டும் என எதிர்பார்க்கிறேன். என்று அபூபக்ர் ரழியல்லாஹ் அன்ஹ் அவர்கள் பதிலளித்தார்கள். இந்த செய்தி புகாரியில் 1387 திங்கட்கிழமை மரணம் என்ற தலைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் திங்கட்கிழமை  மரணிப்பதற்கு அபூபக்ர் ஆசை வைத்தார்கள் என்பதைத்தவிர வேறு செய்திகள் இல்லை.

எந்த நாளில் மரணிப்பது என்பதை வைத்து இஸ்லாம் நல்லவர்கள் கெட்டவர்கள் என்று பிரிக்கவில்லை. எந்த நிலையில் மரணிக்கிறோம் என்பதே முக்கியம். அல்லாஹ் நம்மனைவரையும்  அவனை அஞ்சிய நிலையில் உயிர் பிரியச் செய்வானாக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *