[தொடர்: 1-100] நேரங்களை பேணுதல்

இரண்டு பாக்கியங்களில் பெரும்பாலான மக்கள் அலட்சியமாய் இருக்கின்றனர். அவை ஆரோக்கியமும், ஓய்வுமாகும், என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( அறிவிப்பவர்:-அனஸ் (ரழி) நூல்: புகாரி-6412 )

ரமலானில் கடைசி பத்து நாட்கள் வந்துவிட்டால் நபி (ஸல்) அவர்கள் வரிந்து கட்டிக்கொண்டு இரவு நேரங்களை (இறைவணக்கங்களால்) உயிர்பிப்பார்கள். தம் குடும்பத்தினரையும் இரவில் விழிக்கச் செய்வார்கள் ( அறிவிப்பவர்: -ஆயிஷா (ரழி) நூல்: புகாரி-2024 )

வாழ்நாளை எப்படி கழித்தான்? வாலிபத்தை எதில் ஈடுபடுத்தினான்? செல்வத்தை எப்படி சம்பாதித்தான்? சம்பாதித்ததை எவ்வழியில் செலவு செய்தான்? கற்றவைகளில் எதை செயல்படுத்தினான்? என்ற இந்த‌ ஐந்து விசயங்கள்பற்றி விசாரிக்கப்படாதவரை மறுமை நாளில் எந்த மனிதனின் பாதமும் தன் இறைவனிடமிருந்து நகர முடியாது, என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( அறிவிப்பவர் :- இப்னு மஸ்ஊத் (ரழி) நூல்: திர்மிதி-2531 )

(பயணம் செய்யும்) யாரேனும் (கொள்ளையர்களை) அஞ்சினால் முன்னிரவிலேயே பயணத்தை மேற்கொள்ளட்டும். யார் முன்னிரவில் பயணம் செய்கிறாரோ அவர் இலக்கை அடைகின்றார். அறிந்துகொள்ளுங்கள்! அல்லாஹ்வின் பொருள் மதிப்புமிக்கதாகும்.அறிந்துகொள்ளுங்கள்! அல்லாஹ்வின் பொருள் சொர்க்கமாகும்! ( அறிவிப்பவர்:- அபு ஹுரைரா (ரழி) நூல்: திர்மிதி-2567 )

பயன்கள்:-

  • பயனுள்ள வழிகளில் நேரங்களை பேணுதல் அவசியம்.
  • மனிதன் தன் நேரங்களைப் பற்றி விசரிக்கப்படுவான்.
  • பெரும்பாலோர் நேரத்தை வீணடிக்கிறார்கள். அதை அலட்சியம் செய்கிறார்கள்.
( எழுத்தாக்க உதவி: சிங்கை ஷாஜஹான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *