[தொடர்: 11-100] ஜமாஅத் தொழுகையின் சிறப்பு

  • ஒருவர் ஜமாஅத்துடன் தொழுவது தன்னுடைய வீட்டில் தொழுவதை விடவும் கடைவீதியில் தொழுவதை விடவும் இருபத்தைந்து மடங்கு சிறந்ததாகும். இது ஏனென்றால் ஒருவர் அழகிய முறையில் உளூச் செய்து தொழுகைக்காகவே பள்ளியை நோக்கிச் செல்வாரானால் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் ஒரு பதவி உயர்த்தப்பட்டு ஒரு பாவம் மன்னிக்கப்படுகின்றது.
  • அவர் தொழுது முடித்துவிட்டு அவ்விடத்திலேயே இருக்கும் வரை வானவர்கள், இறைவா! இவருக்கு நீ அருள் புரிவாயாக! என்று பிரார்த்திக் கொண்டேயிருப்பார்கள். உங்களில் ஒருவர் (ஜமாஅத்து) தொழுகையை எதிர் பார்த்து (தொழும் இடத்திலேயே இருந்து) கொண்டிருப்பவர் தொழுகையிலேயே இருப்பார் என நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) – நூல்: புகாரி (647), முஸ்லிம்.
  • ஏதேனும் ஒரு ஊரிலோ அல்லது காட்டுப் பகுதியிலோ மூன்று பேர்கள் இருந்து அவர்களிடையே (ஜமாஅத்தாக) தொழுகை நிறைவேற்றப்படாவிட்டால் அவர்கள் மீது ஷைத்தான் ஆதிக்கம் கொள்கிறான். எனவே ஜமாஅத்துடன் தொழுவதைக் கடைபிடியுங்கள் ஏனெனில் தனிமையில் மேயும் ஆட்டைத்தான் ஓநாய் கபலிகரம் செய்கின்றது என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதாவூத் (ரழி) – நூல்: அபூதாவூத் (ரழி)
  • தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது இருபத்தேழு மடங்கு சிறந்ததாகுமென நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி) நூல்: புகாரி (645), முஸ்லிம்.

பயன்கள்:
1. ஜமாஅத்துடன் தொழுவதற்கு சிறப்புகள் அதிகமுள்ளன.
2. ஒருவர் தனித்துத் தொழுவதை விட ஜமாஅத்துடன் தொழுவது சிறந்தது.
3. ஒருவர் ஜமாஅத்துடன் தொழுவதை விட்டுவிடுவது ஷைத்தான் அவர் மீது ஆதிக்கம் கொள்வதற்குக் காரணமாகின்றது.

One comment

  1. Mahdi Ali Khan

    masha allah

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *