[தொடர்: 12-100] பள்ளிக்கு வரும் முறை

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “நீங்கள் இகமாத் சொல்வதைச் செவியுற்றால் தொழுகைக்குச் சொல்லுங்கள். அப்போது அமைதியான முறையிலும் கண்ணியமாகவும் செல்லுங்கள். அவசரகமாச் சொல்லாதீர்கள். உங்களளுக்குக் கிடைத்த ரக்அத்துகளை [ஜமாஆத்துடன்] தொழுங்கள். உங்களுக்குத் தவறிப் போனதைப் பூர்த்தி செய்யுங்கள்”. நூல்:புகாரி [636] , முஸ்லிம், திர்மிதி [326]

நாங்கள் நபி {ஸல்} அவர்களுடன் தொழுது கொண்டிருந்தோம். அப்போது சிலர் வேகமாக வரும் சப்தத்தை அவர்கள் செவியுற்றனர். தொழுகையை முடித்ததும் “உங்களுக்கு என்ன நேர்ந்தது? {இவ்வளவு வேகமாக வந்தீர்கள்}” என்று கேட்டார்கள். அதற்குத் தோழர்கள், நாங்கள் தொழுகைக்கா விரைந்து வந்தோம் என்றனர். “அவ்வாறு செய்யாதீர்கள். தொழுகைக்கு வரும்போது அமைதியாக வாருங்கள் ! உங்களுக்குக் கிடைத்ததைத் தொழுது கொள்ளுங்கள். தவறியதை நிறைவு செய்து கொள்ளுங்கள்” என்று நபி [ஸல்] கூறினார்கள். அறிவிப்பவர்: அபு கதாதா [ரழி] நூல்: புகாரி {635} , முஸ்லிம்

பயன்கள் :

1. தொழுகைக்காக கம்பீரத்துடன் அமைதியாக வருமாறு [நபியின் மூலம்] ஏவப்பட்டுள்ளது.

2. தொழுகைக்காக வேகமாக நந்து வருவது தடை செய்யப்பட்டுள்ளது. ருகூவை அடைந்து கொள்வதற்காயினும் சரியே.

 - எழுத்தாக்கம் : முஹம்மத் இப்னு முபாரக் -

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *