وَلَئِن سَأَلْتَهُم مَّنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ اللَّـهُ ۚ قُلْ أَفَرَأَيْتُم مَّا تَدْعُونَ مِن دُونِ اللَّـهِ إِنْ أَرَادَنِيَ اللَّـهُ بِضُرٍّ هَلْ هُنَّ كَاشِفَاتُ ضُرِّهِ أَوْ أَرَادَنِي بِرَحْمَةٍ هَلْ هُنَّ مُمْسِكَاتُ رَحْمَتِهِ ۚ قُلْ حَسْبِيَ اللَّـهُ ۖ عَلَيْهِ يَتَوَكَّلُ الْمُتَوَكِّلُونَ ﴿ الزمر ٣٨ ﴾
வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று நீர் அவர்களைக் கேட்பீர்களாயின்; “அல்லாஹ் தான்!” என்று அவர்கள் நிச்யமாகக் கூறுவார்கள்; (நபியே!) நீர் சொல்வீராக “அல்லாஹ் எனக்கு ஏதேனும் ஒரு கெடுதி செய்ய நாடினால் நீங்கள் (பிரார்த்தித்து) அழைக்கும் அல்லாஹ் அல்லாதவை அக்கெடுதியை நீக்கிவிட முடியுமா? அல்லது அவன் எனக்கு ரஹ்மத் செய்ய நாடினால்; அவனுடைய (அந்த) ரஹ்மத்தை அவை தடுத்துவிட முடியுமா? என்பதை நீங்கள் கவனித்தீர்களா?” (நபியே!) மேலும் நீர் கூறுவீராக “அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன்; உறுதியாக நம்பிக்கை வைப்போரெல்லாம், அவன் மீதே உறுதியாக நம்பிக்கை கொள்ளல் வேண்டும்.” (39 : 38)
யார் தாயத்தை அணிந்து கொண்டாரோ அவருக்கு அல்லாஹ் நிறைவை தர மாட்டான் என்பது நபிமொழி. மற்றொருஅறிவிப்பில் யார் தாயத்து அணிந்து கொண்டாரோஅவர் இணை வைத்து விட்டார். ( அறிவிப்பவர்:- உக்பா பின் ஆமீர் (ரழி) நூல்: அஹ்மத் )
யார் எதையேனும் தொங்கவிட்டுக் கொள்கிறாரோஅவர் (இறை உதவியின்றி) அதன் பொறுப்பில் விடப்படுவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( அறிவிப்பவர்:- அப்துல்லாஹ் பின் ஹகீம் (ரழி) நூல்: திர்மிதி-2152 )
“மந்திரிப்பது, தாயத்துகள் அணிவது, தலையணை மந்திரம் ஆகியவை ஷிர்க்காகும் ” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( அறிவிப்பவர்:- இப்னு மஸ்ஊத் (ரழி) நூல்: அஹ்மத், அபூதாவூத் )
பயன்கள்:-
- தாயத்து அணிபவர் அதற்கு நன்மை, தீமை அளிக்ககூடிய சக்தி உண்டு என்ற நம்பிக்கையில் அணிந்து கொண்டால் அவர் பெரிய இணைவைத்தலைச் செய்து விட்டார். காரணம் அல்லாஹ் அல்லாதவற்றுக்கு நன்மை, தீமை அளிக்கக்கூடிய சக்தி இருப்பதாக நம்புகிறார். ஆனால் நன்மை, தீமைக்கு அது ஒரு காரணம் மட்டுமே என நம்பினால் அவர் சிறிய இணைவைத்தலைச் செய்துவிட்டார்.
- தாயத்து குர்ஆனில் உள்ளதாக இருந்தாலும் அதை அணிவது கூடாது. ஏனெனில் நபித்தோழர்கள் அவ்வாறு செய்ததில்லை. மேலும் குர்ஆனில் இல்லாததைகொன்டும் தாயத்து அணிவதற்கு அது ஒரு காரணமாக அமைந்துவிடும். மேலும் குர்ஆனை இழிவாக கருதும் நிலையும் இதனால் ஏற்படும்.
- கண்ணேருக்காக வாகனத்தில் சிறிய துணியொன்றதைக் கட்டி தொங்கவிடுவதும், திருக்குரானை வைப்பதும் இந்த வகையைச் சார்ந்ததுதான்.
( எழுத்தாக்க உதவி: சிங்கை ஷாஜஹான் )